“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”
என்னும் வள்ளலார் பெருமானாருடைய
வேண்டுதலும் நிறைவேறும் என்பது
என் அசைக்க முடியாத நம்பிக்கை.
இசுலாமிய
நெறியின் பெருமைகளை எல்லாம் விளக்கியதோடு
அருமையானதொரு வாழ்த்துரை நல்கியும் சிறப்பித்த முன்னாள் புதுவை
முதலமைச்சரும், நடுவண்அரசு அமைச்சரும் இந்நாள்
பாராளுமன்ற
உறுப்பினருமான திரு. எம்.ஓ.எச். பாரூக் அவர்களுக்கும்,
எங்கள் மீது பேரன்பு கொண்டவரும், நாங்கள் புரிந்து வரும்
பணிகளை
எல்லாம் அவ்வப்போது பாராட்டி ஊக்கமளிப்பவருமான முன்னாள்
புதுவைக்
கல்வி அமைச்சர் திரு.எஸ். பி. சிவக்குமார்
அவர்களுக்கும்,
இக்காவியம்
வெளியாகத் தூண்டுகோலாய் விளங்கிய அனைத்துச்
சமயச்
சகோதரவாழ்வுச் சங்கத் தலைவர், செவாலியே லெழியோன்
தெலொன்னோர்,
புதுவை நகரக் காசியார் திரு.எம். எம். உசேன்,
அவர்களுக்கும்,
வாழ்த்துரை
நல்க வேண்டும் என்று நாங்கள் கேட்டவுடன், தம்
பல்வேறு
பணிகளுக்கிடையிலும் - எங்களை அமர வைத்துக்
கொண்டே நூல் முழுவதையும்
புரட்டி - உடனடியாக அருமையானதொரு வாழ்த்துரை நல்கிய சமய
நல்லிணக்க
மாமணி பேரருட் பெருந்தகை புதுவை கடலூர் மறைமாவட்டப் பேராயர்
ச. மைக்கிள் அகுஸ்தீன் அவர்களுக்கும்,
சென்ற
இடமெல்லாம் செந்தமிழ்க்கொடி நாட்டி - வென்று விளங்கி வரும்
சீறாச்செல்வர் என்று போற்றப்படும் சிலம்பொலி சு.
செல்லப்பனார் அவர்கள்
காவியம் முழுவதையும் கருத்தூன்றி ஆய்ந்து, தம் உடல்நிலை
இயலாத
சூழ்நிலையிலும் கூட எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஓரிரு
நாள்களில்
மணியானதொரு அணிந்துரை நல்கியதோடு நான் ‘காப்பிய வேந்த’ராக விளங்க
வேண்டுமெனவும் வாழ்த்துரை வழங்கினார். அவர்தம்
செந்தமிழ் நெஞ்சத்துக்கும்,
தமிழகம்
போற்றும் தகைசால் பாவலர் கவிக்கோ அப்துல் ரகுமான்
அவர்கள் எண்ணற்ற பணிச்சுமைகளுக்கு இடையில் இருந்தாலும்,
மனமுவந்து
வாழ்த்துப்பாடல் நல்கியது நாங்கள் பெற்ற பெரும் பேறே ஆகும்.
அன்னாருக்கும், அவர்தம் துணைவியாருக்கும்,
|