எப்பொழுதுமே எங்கள் முயற்சிக்கு உறுதுணையாக விளங்கும் அருந்தமிழ்
அடிகளார் பி.பி. சேவியர் அருள்தந்தை அவர்கட்கும்,

காவியம் எழுதும் பணியில் எங்களை எப்பொழுதும் ஊக்கமூட்டி வரும்
சமய நல்லிணக்கச் செம்மல் அருட்தந்தை ஆ.ச.அந்தோணிசாமி அடிகளாருக்கும்,

நாங்கள் புரிந்து வரும் இலக்கியப் பணிகளுக்கும் சமய நல்லிணக்கம் சார்ந்த
பணிகளுக்கும் என்றென்றும் உற்ற உதவியாக இருந்தும் தேவைப்படும்
வழிகாட்டுதல் அளித்தும், ஊக்கமும், ஆக்கமும் அளித்துவரும் புதுவையின்
சீதக்காதி என்று போற்றப்படும் பொன்மன அறச்செல்வி கர்மலோ லெபோ
அவர்களுக்கும், அவர்தம் அன்புத்தம்பியார் திரு. பெஞ்சமின் லெபோ
குடும்பத்தார்க்கும்,

இறைநம்பிக்கையும் மனிதநேயமும் மிக்க இன்முகப் பேச்சாளர்
திருமிகு.பி.எஸ்.பழனிச்சாமி (இயக்குநர், புதுவைத்தொலைக்காட்சி நிலையம்)
அவர்களுக்கும்,

காவியம் முழுவதையும் மூன்றே நாள்களில் படித்து முழுமையாகத் திருத்தம்
செய்து உதவிய புதுவை அருங்கலைப் பணிச் சான்றோர் வில்லிசைச்செல்வர்,
தேசிய நல்லாசிரியர் கலைமாமணி திரு. இ. பட்டாபிராமன் அவர்களுக்கும்,
அவர்தம் துணைவியாருக்கும்

எங்கள் குடும்ப நண்பர்; சகோதரர்; தோன்றாத் துணை; எங்கள்
முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவரும், யாவருக்கும் இனிய முகங் காட்டி உதவி
செய்பவருமான திரு.வி.ஞானசம்பந்தம் அவர்கட்கும் அவர்தம் துணைவியாரும்
என்தங்கையுமான திருமதி மீனா அவர்கட்கும்,

எங்கள் பால் பாசமும், அன்பும் மிகப்பெற்ற சகோதரியார் - எப்போதும்
உங்களுக்கு என் வாழ்த்து உண்டு என்று கூறிப் பெருமையூட்டும்
கூட்டுறவுத்துறைப் பதிவாளர் திருமதி தேவி மாத்யூஸ், அவர்களுக்கும்,

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று கூறும் நீங்காத அன்பும், நேசமும்
கொண்டு பழகுகின்ற சமூகநலத்துறை கள அதிகாரி அன்புச் சகோதரி 
திருமதி சாந்த் சுல்தானா, அவர்கட்கும்,

இடைவிடாமல் கல்லூரிப் பணிகளும் குடும்பப் பணிகளும் பெருஞ்சுமையாக
இருந்தபோதும் - காவியம் முழுவதையும் படித்துப்