xiii

நூறு செய்யுளுமுள்ள பழமையான ஓலைச்சுவடி ஒன்று உதவினர் அது
ஒவ்வொரு செய்யுளுந் தனித்தனிக் கதை கொண்டுளதாற் பல கதைகள்
விளங்கவில்லை. வரலாறு கண்டெழுதினாலன்றி எல்லோர்க்கும்
பயன்படாதெனக் கொண்டு இம்மண்டலமுற்றிலுஞ் சென்று அவ்வவ்
நாட்டில் எழுந்தருளியுள்ள தெய்வங்கள், உபகாரிகள் மீது பழைய
புலவர்களாற் பாடியுள்ள புராணம், குறவஞ்சி, பள்ளு, காதல், உலா,
ஊஞ்சல், மெய்க்கீர்த்தி மாலை முதலான ஏடுகளைக் கண்டுபிடித்துங்
கோயிற் பூசகர், மாணிக்கத்தாள் சாசனம் (பட்டயம்), நாட்டுக் குருக்கள்,
நாட்டுப் புலவர் இவர்களைத் தேடிக்கண்டு கேட்டுச் சில ஒருவாறு
விளங்கின. சங்க நூற்பதிப்புகள் மதுரைச் செந்தமிழ்ப் பிரசுரங்களிற் சில,
நமது இராஜாங்கத்தாரால் எடுத்து வெளிப்படுத்தியுள்ள சிலாசாசனங்கள்,
என்னாற்கண்ட சிலாசாசனங்கள், செப்பேடுகள் முதலியன இதற்குத்
துணையாக நின்று பண்படுத்தின. இவற்றில் இச் சதகத்துக் கதைகள்
தெரிந்தன. ஆதலின் கருத்துரை - வரலாறு - மேற்கோள்கள் எழுத
ஒருவாறு இயன்றன. 99 ஆவது செய்யுளில் கொங்குவேள்மாக்கதை
என்னும் உதயணன் கதையின் விவரம் குறிக்கப்பட்டுள்ளது என்றாலும்
முழுவிபரம் தெரியாமையால் ஒன்றும் எழுதவில்லை. தெரிந்தவர்கள்
கருணை கூர்ந்து அறிவிக்குமாறு வண்டுகிறேன்.

செய்யுட் கருத்து, சரித்திரப் போக்கு, நாட்டு வழக்கு இவற்றை ஒத்த
சாசனங்களிற் சிலவற்றிற்குக் கால அளவைக் காட்டியும் இடமுடமை
கூட்டியுமிருக்கிறேன். ஆராய்ச்சிக் குறைவால் பிழைபட்டிருப்பின்
அறிஞரவற்றை நன்கு விளக்கி ஒப்பு முறையைக் காட்டி மகிழ்விப்பின்
நன்றியறிதலுடன் மறுபதிப்பில் திருத்தி வெளியிடுகிறேன்.

ஒரு நூலைப் பதிப்பிக்குங் காலத்தில் உளவாகுங் காலப்போக்கு
பொருட்செலவு. உழைப்பு முதலியவற்றைக் காட்டிலும், அவற்றைத்
தேடுதலினும் பரிசோதித்தல் முதலியவற்றினும் உளவாகுங் காலப் போக்கு
முதலியன எத்தனையோ மடங்கு அதிகமென்பது பழய நூலச்சிட்டார்க்கே
நன்கு தெரியும்.

இதனை ஆராய்ச்சி செய்து அச்சிடுதலிற் சிறிதும் எனக்குப்
பொருட்கவலை உண்டாகாதபடி பழய கோட்டைப் பட்டக்காரர் ஸ்ரீமான்
நல்ல தம்பிச் சர்க்கரை உத்தமிக்காமிண்ட மன்றாடியார்
அவர்கள் கைம்மாறு கருதாது பேரன்புடன் பொருளுதவி செய்தனர். இவர்களது
பெருந்தன்மையும் வண்மையும் வித்தியாபிமானமும் மதித்தற்பாலன.
இந்நூல் திருத்தமாக விரைவில் வெளிவர வேண்டுமென்று பலவழியிலுந்
துணைபுரிந்தவர்