xiv

களிற்றலைமை பெற்றவர்கள் குட்டைபாளையம் ஸ்ரீமான். அர்ஜுன
கவுண்டரவர்கள். அவ்வப்பொழுது ஆங்காங்கே உதவிசெய்த கனவான்கள்:-

ஸ்ரீமான் டாக்டர் P. சுப்பராயன் அவர்கள், M. L. C.
                   திருச்செங்கோடு மிட்டாஜமீன்தார்.

     " S. முத்துச்சாமிக் கவுண்டரவர்கள், சித்தளந்தூர் மிட்டாஜமீன்தார்.
     " N. இராஜாவுக்கவுண்டரவர்கள், காட்டுப்பாளையம் மிட்டாஜமீன்தார்.
     " S. சுப்பராயக்கவுண்டரவர்கள், புத்தூர் மிட்டாஜமீன்தார்.
     " துரைசாமிக்கவுண்டரவர்கள், பூந்துறை மிராசுதார்.
     " ஆண்டமுத்துக்கவுண்டரவர்கள், அப்பிச்சிமார்மடம்.
     " திவான் பஹதூர் - காளிங்கராயரவர்கள், ஜமீன்தார் ஊற்றுக்குழி.

ஸ்ரீமான் ஜகமண்டலாதிபதி சந்திரகோபண மன்றாடியாரவர்கள்,
                               ஜமீன்தார் புரவியபாளயம்
    " வெங்கடசுப்பு வணங்காமுடி வாணவராயரவர்கள்,
                               ஜமீன்தார் சமத்தூர்
    " கணபதிக் கவுண்டரவர்கள், மிட்டா ஜமீன்தார் கொக்கராயன்பேட்டை
இந்நூற் பரிசோதனைக்குக் கருவியாக இருந்த பிரதிகள் 6 முற்றுமுள்ளது.
அபூர்த்தியானவை 5, அவை வருமாறு :-

பழையகோட்டை அரண்மனை சம்பிரதி ஸ்ரீமான் இராமயபிள்ளை
                                                                 யவர்கள் பிரதி 1
சந்தேகவுண்டன் பாளயம் ஸ்ரீ. குமாரஸாமிப் புலவரவர்கள்        பிரதி 1
தென்கரை நாட்டுப் பட்டக்காரர்                                      பிரதி 1
சிலம்பகவுண்டன் வலசை ஸ்ரீ வேல்மணிப் புலவர்                  பிரதி 1
ஸ்ரீ பாலசுப்பிரமணிய உபாத்தியாயரால் காங்கேயம் பட்டக்காரர் பிரதி 1
பூந்துறை ஸ்ரீ பதுபநாப அய்யர்                                         பிரதி 1

இந்நூலைப் போலவே பின் பதிப்பிக்க எண்ணியுள்ள நூல்கள்
ஒவ்வொன்றையும் எண்ணியவண்ணம் நிறை வேற்றுதற் பொருட்டும்
பிரதியுதவி, பொருளுதவி முதலிய புரிந்தோர் பெருவாழ்வடையும்
பொருட்டும் திருவருள் சுரக்கும்படி எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளாகிய
இறைவனுடைய திருவடித் தாமரைகளைப் பிரார்த்திக்கின்றேன்.

தி. அ. முத்துசாமிக் கோனார்