தன்பெயரைச் சிவபெருமான்
றிருவாக்கா
லொருபாக்குத் தலைமை யாக
முன்பெயரு மைப்பாட்டிற் சிறந்தகொங்கு
நாட்டிலிசை முதிர்செங் கோட்டிற்
பொன்பெயல்செய் மாரியெனக் கவிமழையை
மிகப்பொழியும் புலவர் மெச்சுங்
கொன்பெயரா தமையாயர் குலத்துமுத்து
சாமிப்பேர் கொண்ட நல்லோன்
சிலவருடந்
தானேயா ராய்ச்சி
செய்தும் பலகலையுஞ் சேரக்கற்ற
நலவருடன் கேட்டறிந்துந் தமிழ்த்தெய்வந்
துணையாக நாளு நின்று
நிலவருடன் பாற்செயவுங் கிடைத்தகொங்கு
மண்டலச்சீர் நீடு நிற்கும்
பலவருடம் போற்பொழியுஞ் சதகநூ
லுரைகண்டு படித்துப் பார்த்து
|