xvi

நாடினைத்து நகரினைத்தந் நாட்டிலவ
     தரித்துநன்னூல் நலமுற் றோங்கப்
பாடிவைத்த புலவர்தமிழ்ச் சங்கமே
     வியபுலவர் பாவ லோர்க்குத்
தேடிவைத்த நிதியளித்த மன்னர்தொகை
     யினைத்து மற்றைச் சீரினைத்தென்
றாடியுற்ற பொருள்போலக் காட்டுமா
     றிறுதியிலே யமையச் சேர்த்து

திரட்டியச்சிற் பதிப்பித்துப் பற்பலபுத்
     தகங்களாச் செய்து முன்னம்
முரட்டிமிரம் நீங்குதற்கு விவேகதிவா
     கரனைநல்கு முறைபோல் யாரும்
புரட்டிமயங் காவண்ண மெய்யுணரத்
     தந்தனனிப் புலவர் கோனுக்
கிரட்டியன்பு செய்வதலான் மற்றினியென்
     கைம்மாறொன் றியற்றற் பாற்றே.

திருவாவடுதுறை யாதீன வித்துவானும்
மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் சைவ நூற்பரிசோதகருமாகிய
ஸ்ரீமான் - சே.ரா. சுப்பிரமணியக் கவிராயரவர்கள்

விருத்தம்

தென்னாட்டுப் புலவரே மிகச்சிறந்த
    புலவரெனத் தெரிந்து மெச்சிப்
பொன்னாரங் கோடிநிதி யுதவுகொங்கு
    மண்டலத்தார் பொருந்து மேன்மை
முன்னோர்பாற் செயும் பத்தி நல்லொழுக்க
    முதற்குணங்கண் முறை விளங்க
வொன்னாரும் மகிழ்சதக முயர்கார்மே
    கக்கவிஞ ருரைத் திட்டாரால்,

அனையதனை யாய்வோர்க ளகமகிழக்
    குறிப்புரையொன் றமைத்தச் சேற்றி
வனையுநீ ருலகமெலா முலவவிடுத்
    தோரெவரேல் வையத்திற் சீர்
புனையுமொரு விவேகதிவா கரனையுதிக்
    கச்செய்தோர் புலவர்சூழுந்
தனைநிகர்செங் கோட்டுமுத்துச் சாமிக்கோ
    னாரெனும்பேர் தாம்பெற் றோரே.