திண்டுக்கல்
முனிசிபல் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்
ஸ்ரீமான்
- கு. வீராசாமி பிள்ளையவர்கள்
நேரிசை
யாசிரியப்பா
திங்கள்
கங்கைசேர் செஞ்சடை நிமலன்
பொங்கர வணியும் புனிதன் புராந்தகன்
அர்த்த நாரிய னடியவ ருளத்தில்
கர்த்தனாய்த் தோன்றுங் கண்ணுதன் மூர்த்தி
இறைமலை பெற்ற மறைமுதற் செல்வி
யுறையிடப் பாகக் கறைமிடற் றண்ணல்
தங்கு மைந்திணைத் தரையினிற் புனித
கொங்கு மண்டலச் சங்கர னருளால்
ஆயகலை வல்ல வர்த்தநா ரிக்கோன்
தூயமா தவத்தாற் றோன்றிடுங் குரிசில்
வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பான்
நிலம்புகழ் சைவ நெறிகண் டுயர்ந்தோன்
சைவ சமயா சாரிகள் பதமே
உய்வகை யென்று உளங்கொளுந் தூயோன்
சந்தமார் கவியைத் தகவுடன் பாடுஞ்
செந்தமிழ்ப் புலவர் சேகர முடையோன்
விதானக கதிரை வேலுளந் தேறச்
சதாவ தானஞ் சாற்றுநல் லாசான்
மருவுசெங் கோட்டு மான்மிய மன்றி
பொருளமை வெஞ்சைப் புராணமு முரைத்தோன்
கௌவையொன் றில்லாக் கண்ணக னுலகில்
ஒளவை பாடிய வைவே லசதி
நந்த கோப னானாயர் மூலர்
முந்து கழுவுள் முன்னொளிர் மரபோன்
முத்தமி ழுணர்ந்த வித்தகச் செல்வன்
முத்துச் சாமி யெனும்பெயர்ப் பெரியோன்
பிண்டி நீழற் பெம்மா னடியுளங்
கொண்டகார் மேகங் கூறுங் கொங்கு
மண்டல சதகம் வியப்புடைத் தென்று
தண்டமிழ் சுலவுந் தரையெலாந் தேடி
நன்கா ராய்ந்து நயக்கும் பொருளொடு
பன்னலங் கவினப் பண்டிதர் வியப்பப்
பொழிப்புரை யோடு மேற்கோள் புதுக்கி
கழிபெருங் காதலாய்க் கற்பவர் கேட்பவர்
எளிதி லுணர விலக்கணக் குறிப்புடன்
அளியி லளித்தே வச்சிற் பதித்து
நலம் பெற வருளின னாவலர்
பலரும் போற்றிப் பயன்பெறு மாறே. |
|