xxv

சிவமயம்

        கொங்கு மண்டல சதக உரையாசிரியர் இயற்றியன

விநாயகர் காப்பு

கலிவிருத்தம்

பொற்பு நீடு புரிசடை யத்தனார்
கற்பு நீடு கனிமணந் தீன்றவோர்
வெற்பு நீடு மிளிர்களிற் றின்சரன்
அற்பு நீடு மகத்து ணிறுத்துவாம்.

அர்த்த நாரீச்சுரர் துதி

அறுசீரடியாசிரிய விருத்தம்

எல்லாப் பொருளுந் தானாகி
    யெதினும் பொருந்தா திசைக்குமறைச்
சொல்லாய்ப் பொருளாய்ச் சொலாநிலையாய்த்
    துரிசற் றவர்த மனத்தினன்றி
நில்லாப் பிழம்பா யிருசாய
    னிலவி யமுதி னொருவடிவாய்
நல்லா ளிடத்து விளங்குமர்த்த
    நாரிப்பரனை வணங்குவமால்.

சுப்பிரமணியர் துதி

வேறு

ஒழுக்கமே விழுப்ப மேலா முணர்ச்சியு மில்லாப் பொல்லாப்
புழுத்தன யனைய ரேனும் புண்ணியா முருகா வென்று
வழுத்துவோர் துயர மேக வான்மழை பொழிதன் மான
பழுத்தநல் வரத்தை யூற்றும் பணிகிரி குகனை யுள்வாம்.