'நீருந் தெளித்துக் கலம் வைக்க
நிலமே சமைத்துக் கொள்ளீரே'

எனக் கூறுமாறு காண்க.

இனி,   அக்கால  மகளிர்  நெல்  முதலியன   குற்றுங்கால், பாட்டுப்
பாடிக்கொண்டு  குற்றுதல்  இயல்பாம்.  இப்பாட்டு  வள்ளைப்பாட்டு  எனப்
பெயர் பெறும்.

அரிசியுள்,  பழ  அரிசி   மிகவும்   நல்லதென்று   குறிப்பிக்கின்றார்
ஆசிரியர். பேய்கள்,

'பல்லைத் தகர்த்துப் பழ அரிசி
ஆகப் பண்ணிக் கொள்ளீரே'

எனக் கூறினவாகக் காண்க.

    கூழுக்கு   வெங்காயமும்   உப்பும்   இடல்   வழக்கமாம்   என்பது,

'பல்எனும் உள்ளியும் கிள்ளிஇட்டு
உகிரின்உப்பும் இடுமினோ'

    எனப் பேய்கள் கூறுமாற்றான் அறிக.

    கூழை  உப்புப்  பதம் பார்த்தும், இறக்குவதற்கு முன் நன்கு கிண்டியும்,
பின்  வெந்த   பதம்  பார்த்தும்,  மெத்தென  இறக்க   வேண்டும்   என்று
குறிக்கப்படுவது,  கூழ்  அடும்  இயற்கையைச்  சிறக்கக்  காட்டி  நிற்கிறது.

     வெங்காயத்தைக்  கறித்துக்கொண்டுண்ணும்  பழக்கம்,

'உள்ளிக றித்துக்கொண் டுண்ணீரே '

    எனப்  பேய்  கூறுவதலால்  உணர்த்தப்படுகின்றது.

    அக்கால  உண்கலங்களிற்  புகைச்சின்னம்  எனப்படும்  சோற்றுத்தட்டு,
மண்டை  என்பன  சில.  பேய்கள்

'புகைச் சின்னம் பரப்பீரே'
'பலமண் டைகளாக் கொள்ளீரே'

    எனக் கூறுமாறு காண்க.