போர்க்களத்தே யானையின் துதிக்கையை வெட்டித்தம் தோளில்
போட்டிருக்கின்றார் சிலர். இக் காட்சியைக் காட்டுகின்றவர்,
'வாளில்வெட்டி வாரணக்கை தோளில் இட்ட மைந்தர்தாம்
தோளில்இட்டு நீர்விடுந் துருத்தியாளர் ஒப்பரே'
|
என்கிறார். நீர் சொரிவதற்கான நீண்ட குழாய் வடிவமான துருத்தியைத்
தோளிற் கொண்ட துருத்தியாளரை ஒத்தனராம் அவர்கள்.
இனி, உவமேயத்தின் உயர்விற்கேற்பச் சிறந்த பொருள்களை
உவமையாயமைத்து உவமேயத்தின் உயர்வைப் புலப்படுத்துகின்றார்.
சோழநாடு அரசனை இழந்து நிலைகுலைந்து அல்லலுற்றபொழுது
குலோத்துங்கன் சோழ நாடடைந்ததைக் கூறுகின்றவர்,
'கலிஇருள் பரந்த காலைக் கவிஇருள் கரக்கத் தோன்றும்
ஒலிகடல் அருக்கன் என்ன உலகுய்ய வந்து தோன்றி'
|
எனக் கூறிக் குலோத்துங்கனுக் குவமையாக ஞாயிற்றை, அமைத்தனர்.
குலோத்துங்கன் இளவரசுப்பட்டம் எய்தியதும் போர்வேட்டெழுந்து
வடதிசை நோக்கிச் சென்றபொழுது சென்றவிடமெல்லாம் பகைவரை
வென்றிகொண்டு சிறந்தான் எனக் கூறுபவர், மேல்திசை நோக்கி ஞாயிறு
புறப்பட்ட அளவில் ஆண்டுறைந்த இருள் முழுதும் மாண்டொழிந்தது
போலப் பகைவர் ஒடுங்கினர் என உவமை கூறுந் திறம் பெரிதும்
பொருந்திய தன்றோ?
'குடதிசைபு கக்கடவு குரகதர
தத்திரவி குறுகலுமெ றிக்கும் இருள்போல்'
|
என்பது காண்க.
இனி, உவமேயத்தின் புன்மை புலப்படுமாறு இழிந்த பொருளை
உவமைகூறுந் திறத்தையும் காண்க. போர்க் களத்தினின்றும்
மறைந்தோடிய கலிங்க வேந்தன் ஒரு மலைக்குவடு பற்றி இருந்தானாக,
அஃதுணர்ந்த சோழவீரர்.
|