முகப்புதொடக்கம்
8முக்கூடற் பள்ளு

வழங்கும் யாழ்ப்பாணம் முதலிய பகுதிகளிலும் திருமுக்கூடற் பள்ளு, திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகிய இந்த நூல்கள் தமிழ்ப் பள்ளிக்கூடத்து மாணவர்கள் எல்லோருக்கும் பாடமாக இருந்து தமிழ் இன்பத்தை வழங்கிச் செழிப்படையச் செய்திருக்கின்றன.

திருமுக்கூடற் பள்ளின் வாக்கிலும் போக்கிலும் ஈடுபட்டு அதன் கவிதை வெள்ளத்தில் திளைத்து வாழ்ந்த மக்கள் எல்லோரும் தாங்கள் தங்கள் நாட்டிற்கும் நகரத்திற்கும் ஊருக்கும் தனித் தனியாகப் பள்ளு நூல்கள் வேண்டுமென்று அவாவினார்கள். முக்கூடற் பள்ளின் சொற்களையும், அமைப்பினையும், தொடர்களையும் சிலேடை வகைகளையும் எடுத்தாண்ட பள்ளு நூல்கள் நூற்றுக்கணக்காக விளங்குகின்றன. “நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்பது நெல்லை மாவட்டத்தில் வழங்கும் ஒரு பழமொழி. பள்ளு வகை என்பதற்குப் பள்ளர்களின் சாதிப் பரிவு என்று பொருள் கொள்வது உண்டு. ஆனால் “பள்ளு” என்ற நூல்களின் வகைகளை எண்ண முடியாது என்று பொருள் கொள்வதே பொருத்தமாகவும் தோன்றுகிறது. முக்கூடற்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, திருமலைப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப் பள்ளு, வடகரைப் பள்ளு, உரிமைநகர்ப் பள்ளு, சீகாழிப் பள்ளு, தில்லைப் பள்ளு, கண்ணுடையம்மை பள்ளு, கதிரைமலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, சேற்றூர்ப் பள்ளு, திருவிடைமருதூர்ப் பள்ளு, மாந்தைப் பள்ளு, கூடற் பள்ளு, தஞ்சைப் பள்ளு, தென்காசைப் பள்ளு, கொடுமளூர்ப் பள்ளு, இராசைப் பள்ளு, புதுவைப் பள்ளு, முக்கூட்டுப் பள்ளு, மன்னார் மோகனப் பள்ளு, சண்பகராமன் பள்ளு, வையாபுரிப் பள்ளு, திருச்செந்தில் பள்ளு என்றிவ்வாறு பலவாக விரிந்தன.

வல்லான் வகுத்த வாய்க்கால் வழியே எல்லோரும் செல்வது போல, முக்கூடற் பள்ளைப் பின்பற்றி எழுந்த எல்லா நூல்களும் இதன் வழியே சென்றாலும் ஒரு நூலாவது இதன் பெருமைக்குப் பக்கத்தில் ஒரு சிறிதும் அணுகவே இல்லை. நெல்லை மாவட்டத்திற்கு ஏற்பட்ட பெருமைகள் எல்லாவற்றிலும் சிறந்தது குற்றாலத்தால் வரும் பெருமை; அதனினும் சிறந்தது திருக்குற்

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்