முகப்புதொடக்கம்
முன்னுரை 9

றாலக் குறவஞ்சியால் வரும் பெருமை. அதனினும் மிகமிகச் சிறந்தது திருமுக்கூடற் பள்ளினால் வரும் பெருமையே. குற்றாலக் குறவஞ்சியையும், முக்கூடற் பள்ளினையும் சுவைத்துப் படிப்பவர்கள் இரண்டு நூலினுள்ளும் அமைந்து கிடக்கும் பல பொதுத் தன்மைகளை அறிந்து இன்புறுதல் கூடும். குற்றாலக் குறவஞ்சிக்கு முன்பு தோன்றிய நூல் முக்கூடற் பள்ளு. குறவஞ்சி நூல் பல்லாற்றாலும் சிறப்பு அடைவதற்குக் காரணமாக இருந்த நூல் முக்கூடற் பள்ளு என்பது பெரிய உண்மையாகும்.

பழைய இலக்கண நூல்களில் வரும் துறைகளில் ஒன்றைப் பற்றி விரிவாக நூல் செய்யும் வழக்கம் பிற்காலத்தில் எழுந்தது. “நாணிக் கண்புதைத்தல்” என்ற ஒரு துறையைப் பற்றி நானூறு பாடல்கள் அமைத்துப் பாடிய ஒருதுறைக் கோவையும் இதற்குச் சான்று. ஏர்க்களமும் போர்க்களமும் பாடுதற்கு உரிய சிறந்த பொருள்கள். ஏர் உள்ளூர இருந்து உணவூட்டிக் காக்கின்றது. போரும் உள்ளூர மூண்டு பகைதடுத்துக் காக்கின்றது.

"ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும"்

என்பது தொல்காப்பிய வாகைப் படலத்தில் வருகின்றது. இந்த “ஏரோர் களவழி” சிலப்பதிகாரத்தில் வரும் “ஏர்மங்கலம்” பன்னிரு பாட்டியலில் வருகின்ற “உழத்திப் பாட்டு” முதலிய துறைகளை நினைத்தும், திணைநிலை வரிப்பாடல்களாகவும், கூத்துக்கேற்ற துள்ளல்களாகவும் நாட்டில் நெடுகிலும் வழங்கி வருகின்ற பாடல்களின் சுவை கருதியும் இவற்றைப் பின்பற்றியமைத்த இயலிசை நாடக முத்தமிழ் நூலாகப் “பள்ளு” என்ற நூல் தோன்றியது. இந்த நூலின் அமைப்பு முறையை முதன் முதலிற் செய்தவர் எவரென்று தெளிவாகக் கூறப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. என்றாலும் பழைய துறையாகிய “ஏரோர் களவழி”யே இங்ஙனம் நூலாக விரிவதற்கு வித்தாக நின்றது எனலாம். இந்தத் துறை பற்றி இந் நூல் விரிந்தது போல் “குறம்” என்ற துறையைப் பின்பற்றி “மீனாட்சியம்மை குறம்” என்ற நூல் குமரகுருபர அடிகளால் அருளப் பெற்றது. இந்தக் குறம் என்ற நூலும் முக்கூடற்பள்ளு நூலும் ஆகிய

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்