முகப்புதொடக்கம்
முன்னுரை 11

கணமும் கற்பித்தலும் வேண்டும். இந் நெறியாகக் கற்றால் உண்மையான முறையில் தமிழ்க் கவிதையின் இன்பத்தைப் பெறவும் தமிழ் உலகத்திற் பிறந்த பயனை அடையவும் இயலும். இங்ஙனமன்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி எடுத்தவற்றைப் படிக்கச் செய்து தமிழை வளர்க்கின்ற முயற்சி யெல்லாம் நுனிமரத்திலிருந்து அடிமரத்தை வெட்டுகின்ற கணக்குத்தான்.

ஆங்கில முறையாகத் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கியதிலிருந்து தமிழ்க் குறவஞ்சியும் ஓடி ஒளிந்து கொண்டாள்; ‘பள்ளு’ என்ற பாவையும் பதைத்துப் பதுங்கிக் கொண்டாள்; எனவே, ஏடுகள் எல்லாம் பேணுவாரின்றி மறையத்தொடங்கின.முக்கூடற் பள்ளின் முதற் பதிப்பு

முக்கூடற் பள்ளின் முதற் பதிப்பு

இந் நிலையில் இதனைக் கண்ணுற்றுத் திருநெல்வேலிப் பேட்டைப் பரிமளகார வீதியிலிருந்த உயர்திரு. ம. மேத்தர் முகீதீன் அவர்கள், விருத்தாசலம் தியாகராசக் கவிராசரவர்களைக் கொண்டு பல சுவடிகளை ஆராய்ந்து பாங்காக்கி உருத்திரோற்காரி ஆண்டு ஆடிமாதம் முதற் பதிப்பு வெளியிட்டார்கள். இவர்களுக்கு நன்றி கூறுதலும், பாராட்டுரைத்தலும் தமிழர்களின் முதற் கடன். இது முதற்கண் வந்த பதிப்பாக இருந்தாலும் இந்தப் பதிப்பினைப் பிழையின்றி வெளியிட உதவியதாக இருந்தாலும் பிழை மலிந்த பதிப்பாகவே இருக்கிறது. உருத்திரோற்காரி ஆண்டு வெளியிடப் பெற்றது. எனவே இற்றைக்குத் தொண்ணூற்று மூன்று ஆண்டுகட்கு முன்பு வெளிவந்தது என்று கொள்ளவேண்டும். அறுபது ஆண்டுகளின் பெயர் வரிசைப்படி ஒன்றரை வட்டத்திற்கு மேல் கழிந்தது என்று கொண்டால் 93 ஆவது ஆண்டு கழிந்தது என்று கொள்ளவேண்டும். இவ்வாறன்றி அரை வட்டம் மட்டுந் தாண்டியதாகக் கொண்டாலும் 33 ஆண்டு கழிந்ததாகக் கொள்ளல் வேண்டும்.

திரு. மு. அ. பதிப்பு

இதன் பின்பு 1940இல் உயர்திரு. மு. அருணாசலம் (எம்.ஏ.) அவர்கள் முக்கூடற் பள்ளின் ஒரு பதிப்பு வெளியிட்டார்கள்.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்