திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

திகழ்தலால், அவை தம்மைப் பெற விரும்புவோர் பிள்ளைத் தமிழ்ப்
பாட்டுக்களில் உள்ளம் இடையறாது பழகுதல் இன்றியமையாததாகும்.  

கடவுள் இடத்திலும் பெரியாரிடத்திலும் அன்பிற் பழக விரும்பும்
ஆசிரியன்மார்கள் அவர்களை அவ் வன்பிற்கினிய குழந்தைப் பருவத்தராய்
உருவெண்ணி, ஆண்பாலானால் ஆண்குழந்தைகளின்
விளையாட்டுவகைளையும் பெண்பாலானால் பெண்குழந்தைகளின்
விளையாட்டு வகைகளையும் இனிய கொஞ்சு தமிழ்ச் சொற்களால் பாடுகின்ற
நூலே பிள்ளைத்தமிழாகும்.   அவ்வகை வந்த பிள்ளைத் தமிழ் நூல்களுள்
இத் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழும் ஒன்று.  

காப்புப் பருவம்:- பிள்ளைத்தமிழ் பாடுமிடத்து இரண்டாம் மாதத்தில்
பிள்ளையைக்காக்க என்று திருமால் சிவபெருமான், உமையவள், கணபதி,
கலைமகள், அரிகரபுத்திரன், பகவதி, ஆதித்தர், முப்பத்துமுக்கோடி
தேவர்கள் ஆகிய பல கடவுளர் மீது பாடப்படுவது.  

செங்கீரைப் பருவம்:- அஃதாவது செங்கீரை ஆடும் பருவம்.  
இப்பருவத்தின்கண் நிகழும் செயல் ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி
இருகைகளையும் நிலத்தில் ஊன்றித் தலைநிமிர்த்தி, முகம் அசைய ஆடுதல்.  
இஃது ஐந்தாம் திங்களில் நிகழ்வது.  

தாலப் பருவம்:- தாலாட்டைக் கேட்கும் பருவம் தாலாட்டு-ஒருவகை
நாவசைப்பு.   தாலாட்டையேல் தாலாட்டை