முகப்பு தொடக்கம்

செய்வோம்" என்று தலைவணங்கி வாழ்த்துதலும் ஈண்டு நினைக்கத் தகும்.

"ஆரியக் கூத்தாடினும் காரியத்திலே கண்" என்பது ஒரு பழமொழி. சைவந் தழைக்கவும் தமிழ் தழைக்கவுமே கச்சியப்ப முனிவர் இத் தணிகைப் புராணம் இயற்றியருளினார். ஆதலால் அவர் காலத்தே சைவ சமயம் புரக்கத் தோன்றிய திருவாவடுதுறைத் திருமடம் போன்ற எண்ணிலாத் திருமடங்கள் இத் திருத்தணிகையிலிருக்கின்ற காட்சியையும் அவற்றின் சிறப்பினையும் அவரே கூறக் கேட்போம்.

"மும்மலச் செருக்கை முதலொடு முருக்கி
 முழுத்தபே ரறிவெனக் கிளைத்த
 விம்முயிர் கெடுத்து வீங்கிய அருளை
 வியங்கொளுந் திருக்கினை மிளிர்த்துச்
 செம்மைமெய் யருளைக் கடந்தொளிர் சிவத்திற்
 றினகர விழியெனக் கலக்கும்
 இம்முறை யுண்மை ஞானமீ ரைந்து
 மியங்குநர் மடங்களெண் ணிலவால்"

(திருநகரம் - 108)

என்பது அவர் அருண்மொழி.

இவ்வழகிய செய்யுளில் அடிகளார் பரந்த சைவசித்தாந்தக் கடலினையே ஒரு துளியாகச் சுருக்கித் தந்துள்ளமை அவருடைய புலமைப் பேராற்றலைத் தெற்றென விளக்குவதாம். அகத்திய முனிவன் உவர்க் கடலினை உழுந்தளவாக்கினன் என்ப. ஆம், தவப் பேராற்றலுடையார்க்குச் செயற்கரிய செயலும் உண்டுகொல் ? ஈண்டுக் கச்சியப்ப முனிவர் தாமும் அறிவுப் பெருங்கடலை இந்த விருத்தப்பாவினுள் அடக்கிவைத்துள்ளனர். இதன் விரிவினை விரிந்த நூல்களிற் காண்க. பொருளை இந்நூலின் உரையிற் கண்டு தெளிக.

இனி, இத்தணிகை மாநகரத்தில் அசைந்தாடும் நெடிய பொற்கொடிகள் திருத்தக்க முனிவருடைய இராசமாபுரத்துப் பொற் கொடிகளே போல்கின்றன. இத்தணிகை நகரின்கண்,

"செம்பொன் வார்கொடி சேணுற நிவந்துகற் பகத்தின்
 வம்பு லாவிய பொன்னகர் மதிற்புறம் புடைப்ப
 இம்பர் மேம்படு மிந்நகர் நிகர்க்கலாற் றாநீ
 உம்பர் வாழ்தலொண் ணாதென வொறுப்பபோன் றனவால்"
                                          

(திருநகரம் - 116)

என் றோதுகின்றார் கச்சியப்ப முனிவர். இனி, திருத்தக்க முனிவர் தமது இராசமாபுரத்துக் கொடிகள்,

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்