முகப்பு தொடக்கம்

கையெழுத்துப்படி ஒன்றிருந்த செய்தியைக் கேள்வியுற்று, அவ்வுரை அப்பேராசிரியர் குடும்பத்தாரிடமாதல், அவரோடு தொடர்புடையாரிடத்திலாதல் இருக்கக்கூடும் என்றும் கருதி அந்த வுரைப்படியினைக் கண்டுபிடித்துக் கைப்பற்றுதற் பொருட்டு 1943 ஆம் ஆண்டில் பேராசிரியர் கந்தசாமியார் அவர்கள் பிறந்த ஊருக்கே சென்றனர். பேராசிரியர் கந்தசாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் அப்பேராசிரியரோடு தொடர்பு கொண்டிருந்தோரையும் ஆர்வத்துடன் வினவினர். அவ்வாராய்ச்சியால் அப்பேராசிரியர்பால் கையெழுத்துப்படியாக இருந்த உரை நூல் இருக்குமிடம் சிறிதும் புலப்படவில்லை. எனவே அமைச்சரவர்கள் பெரிதும் உளம் வருந்தி மீண்டு வந்தார்கள்.

இனி, இச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவி நந்தமிழன்னையின் திருத்தொண்டிற்கே தம்மை முழுதும் ஆளாக்கியிருந்த அந்தப் பெருந்தகை அமைச்சர் வ. திருவரங்கம் பிள்ளையவர்களும் காலமான பின்னர், அவர்தம் முளக்கருத்தையெல்லாம் நிறைவேற்றிவைப்பதற்கே அவர்தம் தம்பியாராகப் பிறந்தவராகிய உயர்திரு. வ. சுப்பையாப்பிள்ளையவர்களும் தந்தமையனார் உள்ளத்தே முகிழ்த்து நிறைவேறாதெஞ்சி நின்றதாகிய இத்தணிகைப் புராண உரை வெளியீட்டுப் பணியைத் தமதுள்ளத்தே முதன்மையாகக் கொண்டு அவ்வழி அதற்கியன்ற முயற்சியிலீடுபட்டிருந்தனர்.

"எண்ணிய எண்ணியாங் கெய்துப வெண்ணியார்
 திண்ணிய ராகப் பெறின்"

     (குறள் - 999)

என்பது வள்ளுவர் பொன்மொழி

தம் அண்ணனார் எண்ணியவற்றைத் தாமும் திண்மையாக எண்ணுமியல்புடைய திரு வ. சு. பிள்ளையவர்கள் இத்தணிகைப் புராண உரை வெளியீடுபற்றித் திண்ணமாக எண்ணிய எண்ணத்தின் உறைப்பினாலும் திருவருளின் துணையாலும் தந்தமையனார் தேடியும் கிடைக்கப்பெறாத பேராசிரியர் கந்தசாமியார் வரைந்து வைத்திருந்த தணிகைப் புராண உரைப்படி இருக்குமிடத்தைக் கேள்வியுற்றனர். தமக்கெனச் செயலொன்றுமில்லை; எல்லாம் இறைவன் செயலே என்று திரு பிள்ளையவர்கள் தமது பட்டறிவினாலே நன்குணர்ந்தவர்கள் ஆதலால் அச்செய்தி கேட்டவுடன் இதுவும் இறைவன் செயலே என்று எண்ணி இறும்பூதெய்துவாராயினர்.

"தேடுங்கள் கண்டடைவீர்கள்! " என்பது இயேசு பெருமான் திருமொழியாகும். இப் பொன்மொழிக் கேற்பத் தாம் செல்லுமிடமெல்லாம் தணிகைப் புராணத்திற்கு உரை எழுத வல்லார் யார் ? என்றும், பேராசிரியர் கந்தசாமியார் உரை யாங்கிருத்தல்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்