முகப்பு தொடக்கம்

துன்பங்களும் விரைவில் ஒழிந்துபோகும். ஒரு முறை அத்தணிகைமலையை வணங்கப் பெற்றால் அவர்களுக்கு அறுமுகப் பெருமானுடைய திருவருள் உண்டாகும். மக்கட் பிறப்பால் அடைய வெண்ணிய நால்வகைப் பயன்களையும் விரும்பியவர்கள் அந்தத் தணிகைமலையை உள்ளத்தில் எண்ணினாலும் நல்வினை அவர்களை அடைவதற்குக் காலத்தினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அருட் செல்வம் மிகுந்த தணிகை மலையை அடைந்து அங்கு இறப்பவர்கள் கீழ்க்குலத்தினராயினும் மலங்கள் யாவும் ஒழியப் பெற்று வீட்டுலகத்தினை அடைவர். விலைமகளிரின் மேற் கொண்ட விருப்பத்தாலோதொழின்முறைகளாலோ தணிகைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்குவோருங்கூட மறுபிறவியில் கந்தலோகத்தையடைந்து இன்புறுவார்கள். தணிகைப்பதியிற் செய்யப்பெறும் அறங்கள் பிற விடங்களிற் செய்வதினும் கோடி மடங்கு சிறந்ததாகும். அப்பதியில் முருகக் கடவுள் இச்சை, ஞானம், செய்கை என்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேற்படையை வலக்கையில் ஏந்தி, இடது கையைத் தொடையில் இருத்தி ஞான சத்திதரன் என்னும் பெயரோடு விளங்குவார். அத்திருவுருவை உள்ளத்திலே நன்கு பொருந்த எண்ணுகிறவர்கள் அம்முருகப் பெருமானேயாவர். ஆதலின் அங்குச் செல்வாயாக" என்று கூறினார்.

இவ்வாறு பல சிறப்புக்களைச் சிவபிரான் எடுத்துக்கூறியதைக் கேட்ட அகத்தியர் பெருமகிழ்ச்சி யடைந்தார். உடனே விடை பெற்றுக் கொண்டு திருத்தணிகைக்கு வந்தார். நந்தியாற்றில் நீராடினார;் வீராட்டகாசத்தையும் முருகக் கடவுளையும் போற்றி வணங்கினார். ஓரிடத்தில் சிவக்குறியை நிலைநாட்டி வழிபட்டார். பிறகு அறுமுகப் பரமனை உள்ளத்தில் எண்ணிப் பல நாள் அருந்தவம் புரிந்தார். முருகக் கடவுள் அகத்தியர் முன் தோன்றிக் காட்சி கொடுத்து அகத்தியருக்குத் தமிழ்மொழியின் இலக்கணங்களை யெல்லாம் உரைத்தருளினார். அகத்தியர் தணிகை மலையில் நெடுநாள் இருந்து பிறகு பொதியமலையை அடைந்தார்.

சீ பரி பூரணப் பெயர்

முன்னே ஒரு கற்பத்தில் பிரபாகரன் என்னும் பெயரையுடைய ஓர் அரசன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் சுகுமாரி. இவர்களுக்கு நான்கு மக்கள் பிறந்தனர். இந்நால்வருக்கும் சூரன், பதுமன், சிங்கன், தாரகன் என்று பெயர். தந்தைக்குப் பிறகு இவர்கள் நால்வரும் அரசாட்சி செய்தனர். ஒரு சமயம் அகத்திய முனிவர் இவர்களிடம் வந்தார். சூரனும் பதுமனும் அகத்தியரை வரவேற்றுப்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்