முகப்பு தொடக்கம்

வலமாக வந்து வீராட்டகாசத்தை யடைந்து கடலுக்குச் சென்றது. அத்திருத்த நீராற்றுக்கு "நந்தி நந்தினி" "நந்தியாறு" என்பன பெயர்களாம். நந்திதேவர் தவஞ்செய்திருந்த குகை நந்தி குகை என்னும் பெயரைப்பெற்றது. நந்திதேவர் அவ்வாற்றில் மூழ்கிப் பதி பசு பாச இலக்கணங்களையெல்லாம் உரைக்கப் பெற்றார். இந்த ஆற்றில் தைப்பூச நாளில் நீராடுவது மிகுபலனைத் தரும். அருளுரை பெற்ற திருநந்தி தேவர் திருக்கோயிலை வணங்கிப், பிறகு குன்றினை வணங்கிப் பிறகு நந்தியாற்றை வணங்கித், தணிகைமலை கண்ணுக்கு மறையும் வரையிலும் அம்மலையைப் பார்த்துக் கொண்டு புறங்காட்டாது சென்று திருக்கயிலையை அடைந்தார்.

அகத்தியர் அருளுரை பெறுதல்

அகத்திய முனிவர் ஒருகாலத்தில் சிவபெருமானுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிச், "செந்தமிழ் மொழியை எனக்கு அறிவுறுத்தி மெய்யறிவினையும் வழங்குதல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அகத்தியரை நோக்கி, "எத்தகைய மேன்மை வேண்டுமாயினும் நாம் அறிவுரை பெற்ற இடமாகிய திருத்தணிகைமலைக்குச் சென்று முருகளை நோக்கித் தவஞ்செய்வாயாக. அவ்வாறு செய்யின் உன்னுடைய எண்ணம் நிறைவேறும். அத்தணிகைக்குப் போகலாம் என்று ஒருவர் எண்ணினாலும், அவ்வூர்ப் பக்கமாகச் சென்றாலும், செல்வேன் என்று கூறிப் பத்தடி நடந்தாலும் அவர்களுடைய நோயெல்லாம் அடியோடு ஒழிந்து போகும்.

அத் தணிகைப் பதியில் உள்ள குமார தீர்த்தம், குறை நோய், வாதநோய், சூலைநோய் முதலிய நோய்களையெல்லாம் போக்குவதன்றிப் பேய் பூதம் முதலியவைகளால் உண்டாகிய துன்பங்களையும் நீக்கும். மந்திரங்களின் வஞ்சனைகளையும் ஒழிக்கும்; மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை, தாய், இளமங்கையர், பெரியோர் ஆன் முதலிய கொலைளால் உண்டாகிய தீவினையையும் ஒழிக்கும். பகைவர்களைப் பணியச் செய்ய எண்ணினாலும், நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம்முடைய சுற்றத்தார்க்குச் செய்ய விரும்பினாலும், புதல்வர்களை அடைய எண்ணினாலும், புலமை பெற விழைந்தாலும், அரச பதவியை அடைய அவாக் கொண்டாலும், எண்வகைச் சித்திகளையும் எய்தற்கெண்ணினாலும் மூவுலகங்களையும் அடக்க நினைத்தாலும், இவைகளையெல்லாம் அத்திருத்த நீராடலால் அடையலாம்.

அறியாமை பொருந்திய உள்ளத்தையுடைய ஒருவன் தணிகைமலை என்று ஒருகாற் சொன்னாலும், பலவகையான தீவினைக் கூட்டங்களும்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்