முகப்பு தொடக்கம்

வரவழைக்கப்பெற்ற கைலைக் கங்கைக்குக் குமாரதீர்த்தம் என்று பெயர். மாசிமகத்தில் இப்புனிதநீரில்நீராடிக் குமாரலிங்கத்தையும் ஞானசத்தி தரரையும் போற்றி வழிபடுதல் சிறப்புடையது.

நான்முகன் படைப்புத் தொழில் பெறுதல்

முருகப்பெருமானால் சிறையிலிருந்து விடுபட்ட நான்முகன் தன்னுடைய உலகத்திற்குப் போய்ப் படைப்புத்தொழில் செய்ய முயன்றான். படைப்புத் தொழில் கைகூடவில்லை. அதனால் மனம் வருந்தினான். சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்தான். சிவபெருமான் நான்முகனுக்கு முன் தோன்றினார். தணிகை மலையின் பெருமையைக் கூறி, "நீ நம்முடைய சேயைக் குறித்து அப்பதியில் தவஞ் செய்வாயானால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். நான்முகன் தணிகைமலையை அடைந்து மலைக்குக் கிழக்குத் திக்கில் புனிதநீர் ஒன்று உண்டாக்கி ஆபத்சகாய விநாயகரைப் போற்றினான். இறைவனையும் முருகக் கடவுளையும் வணங்கி முருகப் பெருமானைக் குறித்துத் தவஞ் செய்தான். முருகக் கடவுள் காட்சி கொடுத்து விரும்பிய வரத்தினையுங் கொடுத்தருளினார். வைகாசித் திங்கள் விசாகநாளில் பிரமதீர்த்தத்தில் நீராடுவது மிகச் சிறப்பாகும்.

நந்தி அருளுரை பெறுதல்

ஒரு காலத்தில் திருநந்தி தேவர் சிவபெருமானை வணங்கிப் பேரின்பமாகிய வீட்டு நிலையை விளக்கியருளுதல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமான் திருநந்திதேவரைப் பார்த்து, "நீ தணிகைமலைக்குச் சென்று தவம்புரிந்தால் முருகன் தெய்வத் திருவருளமைந்த யாறு ஒன்றை வரவழைத்து நின்னை அதில் மூழ்கச் செய்து தூய்மையை அளிப்பான்; பேரின்ப நிலையையும் விளக்கியருள்வான்" என்று கூறியருளினார். அதனைக் கேட்ட நந்தி தேவர் திருத்தணிகையை அடைந்து ஒரு குகையில் தங்கிப் பலகாலந் தவமியற்றினார். முருகக்கடவுள் மயிலூர்தியில் திருநந்தி தேவர் எதிரே தோன்றினார். நந்தி தேவரின் உடலைத் தம்முடைய திருக்கைகளால் தடவியருளினார். "நந்தியே ! மிகுந்த தவத்தைச் செய்து உடல் வருந்தினாய்; நீ விரும்பிய சிறப்பு யாது ?" என்று கேட்டார். நந்தி தேவர் முருகக் கடவுளைப் பார்த்துச், "சிவதத்துவ அமிர்தம் எனப்படும் புனிதநீரை வரவழைத்து அதில் யான் மூழ்குமாறு செய்தருளுதல் வேண்டும்; மேலும் பதி பசு பாச இலக்கணங்களை உணர்ந்து கடைத்தேறவும் அருள்புரிதல் வேண்டும்" என்று வேண்டினார்.

முருகப் பெருமான் தணிகைக்கு நிருதி திக்கில் இருந்து அப்புனித நீரை வரவழைத்தருளினார். அது தணிகைமலையை

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்