xi
அணிந்துரைகள்

திரு டி. இராமலிங்க ரெட்டியார், எம். ஏ., பி,எல்., அவர்கள்
துணை ஆணையாளர், அறநிலைய ஆட்சித் துறை,
சென்னை.

          உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
          நிலவு லாவிய நீர்மலி வேணியன்
          அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
          மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

பெரிய புராணம் புராணங்களுள் தலைசிறந்தது என்பது அறிஞர் முடிவு. அஃதுஏனைய புராணங்களைப்போல் இல்லாமல் வரலாற்றை உணர்த்தும் நூல் என்று வரலாற்றுப் புலவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இஃது உலகப் பெரும் நூல் என்று கூறுதற்குரிய பெருமையையும் உடையது. இந்த உண்மை முதலில் ‘ உலகெலாம் ‘  என்று தொடங்கி ‘உலகெலாம்‘ என்று முடிந்திருப்பது கொண்டே நிறுவலாம். இத்தகைய அரிய நூலில் நுண் பொருள்களை உணர்தற்குப் பெருந் துணையாக இருப்பது திரிசிரபுரம் மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சேக்கிழார் பிள்ளைத் தமிழாகும். இதற்கு ஒரு சான்றையே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பெரிய புராணத்தின் முதற் செய்யுளின் ஈற்றடியில் வரும், “மலர் சிலம்படி“ என்பதற்குச் சிலர் மலர் போன்ற திருவடி என்று உவமைத் தொகையாகப் பொருள் கொள்ளக்கூடும் என்று யூகித்து ‘உலகெலாம் மலர்ந்த சிலம்படி, மலரும்  சிலம்படி, மலருகின்ற சிலம்படி‘  என்று வினைத் தொகையாகப் பொருள் கொள்ளுமாறு அவர் அப்பிள்ளைத் தமிழில் பாடியிருப்பதைக் காண்க. இப்பிள்ளைத் தமிழ் நூல் சிவஞான போதத்திற்கு விளக்கம் தரும் சிவஞான சித்தியார் போலப் பெரிய புராணத்திற்கு விளக்கம் தரும் நூல் எனின் அது மிகை ஆகாது. 

இத்தகைய பிள்ளைத் தமிழ் நூலுக்குச் செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி, பேராசிரியர் வித்துவான் திரு. பாலூர் கண்ணப்ப முதலியார்  M.A.,B.O.L., அவர்கள் பெருவிளக்க உரை எழுதியிருப்பது, சிறப்பாகச் சைவ சமயப்