இந்நூல் இவ்வளவில் வெளிவரக் காரணமாக அமையும் தமிழக
அரசுக்கும் சிறப்பாக இப்பணியை என்பால் வற்புறுத்தித் தந்து பணிகொண்ட
பேரன்பிற்குரிய நண்பர் சரசுவதி மகால் வெளியீட்டு மேலாளர் திரு
அ.பஞ்சநாதன் அவர்கட்கும் பல்லாற்றானும் துணைபுரிந்து வரும் இம்மகால்
தமிழ்ப்பண்டிதர் திரு ய.மணிகண்டன் அவர்கட்கும் இந்நூலை நுண்ணாய்வு
செய்தும் தம்மிடமிருந்த நூல்களைத் தந்தும் உதவிய பெருந்தகையாளர்
சேக்கிழாரடிப்பொடி திரு. தி.ந.இராமச்சந்திரன் அவர்கட்கும் நூலகநிர்வாக
அலுவலர் திரு.எம்.உத்திராபதி அவர்கட்கும் மாவட்ட ஆட்சித்தலைவரும்
இயக்குநருமாக விளங்கும் திரு. வி.கு. ஜெயக்கொடி இ.ஆ.ப. அவர்கட்கும்
நல்ல முறையில் அச்சிட்டளித்துள்ள சீர்காழி ஸ்ரீ சரவணா அச்சகத்தார்க்கும்
என் மனம் நிறைந்த நன்றி உரியது. இவ்வளவில் என்னைப் பணிகொண்டு
இந்நூல் வெளிவரப் பேரருள் புரியும் தமிழன்னையின் மலரடிகளைப்
போற்றி வணங்குகின்றேன்.

தஞ்சாவூர் 
13.2.97.  

தங்கள்,
ச.பாலசுந்தரம்