xii
செய்தக்காதி நொண்டி நாடகம்
 

கொண்டு ஓடி வந்தேன் ; பிறகு மற்றொரு கள்ளனையும் மயக்கி ஏமாற்றி
விட்டு, கண்ணனூர் வழியாகச் செஞ்சிக்கோட்டைக்குச் சென்றேன்.

அச் சமயம், முகலாயப் பேரரசர் அவ்ரங்குசேபு உத்தரவுப் படி
துல்பகார்கான், இஸ்மாயீல்கான் முதலிய புகழ் பெற்ற படைத்தலைவர்களின்கீழ்
முகலாயச்சேனை அக்கோட்டையை முற்றுகையிட்டு முன்னேறிக்
கொண்டிருந்தது. மேருமலையும் கண்டு மருளும் அப்படைகளுக்கு
முன்நிற்பவர் எவருமில்லை. வேலூர், வந்தவாசி என்னும் இடங்கள்
அடிபணிந்தன. சந்தாவைரோஜி கோர்ப்பரே என்பவர் தலைமை தாங்கி
நடத்திய மராட்டியசேனையும் புறமுதுகு காட்டி ஓடியது. இவ்வாறு வாகை
சூடிய முகலாயப்படை முன்னேறிச் சென்று செஞ்சிக் கோட்டையைச் சுற்றித்
தங்கியது.

தென்னாட்டுக்கு முகலாயச்சேனை முதன்முறையாக இப்போது தான்
வந்தது. பேச்சறியாத்துலுக்கருடைய சேனையின் வலிமையையும்
பெருமையையும்பற்றித் தென்னாட்டினர் கேள்விப்பட்டிருந்தனர். அதனால்,
அவர்களுக்குப் பயம் உண்டாயிற்று. அவர்கள், தங்கள் வீடுவாசல்களை விட்டு
ஓடிக் காடுகளில் ஒளிந்தார்கள் ; சொந்தமாயிருந்த சொத்துக்களையும்
பொருட்படுத்தாது விட்டுவிட்டு வேற்றூர்களுக்குச் சென்றார்கள். பலர்
குழந்தைகுட்டிகளையும் பரிதவிக்க விட்டு உயிர்தப்பினர். எங்கும் ஒரே
அச்சம் நிறைந்திருந்தது. ஊர்களெல்லாம் பாழாயின ; வாழ்க்கையின்
சின்னங்கள் மறைந்தன ; வீடுகள் வெற்று மனைகளாயின.

இவ்வாறு பாழ்பட்ட வீடுஒன்றில் நான் புலியின் குகையில் எலி
நுழைவது போல நுழைந்து பார்த்தேன். எனக்குப் பொருள் ஒன்றும்
அகப்படவில்லை. துல்பகார் கான்பாளையத்தில் ஒருகுதிரையைத்
திருடவேண்டும் என்னும் ஆசையால் ஒரு துடுக்கான எண்ணம் உண்டாயிற்று.
ஒரு பிச்சைக்காரனைப் போல வேடம் தரித்துக் கொண்டு பாளையத்துக்குள்
சென்றேன். கூடாரவாயிலில் பல பக்கிரிகள் கூடியிருந்தார்கள். அவர்களுக்கு
என் வணக்