பலர் வந்து காத்திருந்தும் கண்ணன் அரண்மனை வாயிலில் எவ்வாறு புகுவது? புகுந்தாலும்
அக்கண்ணபிரானைக் காண்பது எளிதாகுமோ? கண்டாலும் அவன்பால் பொருட் செல்வம்
தா என்று இரப்பது புன்மையன்றோ ? என்று பலவாறு எண்ணி எண்ணிப் பெருமூச்சுவிட்டு
நடந்து மேல் கடற்கரையை யடைந்தார் குசேலர்.

2. குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம்

அடைந்தது

இவ்வாறு வருந்திக் காடு பல கடந்து மேல் கடற்கரையடுத்த குசேலர்
வெப்பக்கொடுமை நீங்க ஆங்குள்ள புன்னைமர நீழலிற் சிறிது பொழுது
இளைப்பாறி்னர். பின் கடலைக்கடத்தும் நாவா யோட்டியை அணுகி, கப்பற் கூலி
கொடுக்கக் காசிலாக்குறை இயம்பித் தம்மை அம் மீகாமன் கப்பலில்
ஏற்றிக்கொண்டு போகத்தக்க முறையில் நயந்து பேசினர். அவனும் அதற்கிசைந்து
கப்பலிலேற்றித் துவாரகையை யடுத்தகரையில் இறக்கி விட்டனன்.

துவாரகையைக் கண்டது, முனிவருக்குக் கண்ணனைக் கண்டதுபோல் மகிழ்ச்சி
வினைத்தது. போகும் வழியில் தரையில் சிறு பூச்சி புழுக்களை மிதியாமலும்
நெருக்கமாய்ச் செல்கின்ற கரி, பரி, தேர், காலாள், ஆகிய நாற்படையின் இடையே
பதுங்கிப் பதுங்கி உடம்பு வருந்தாமலும் சென்றனர். பொய்கை, வனம் முதலிய
இடங்களில் நிற்கும் பெண்டிரை நோக்காமலும், கண்ணணைக்காண நெருங்கி வந்து
திரும்பும் அரசர் முதலியோர் அணிந்த கலவை முதலியவற்றின் மணம் இவர்
உடலிலும், கந்தையிலும் படியுமாறு நெருக்கத்திற் புகுந்துபோயினர். பின் கணிகையர்
தெருவையும், வேளாளர் தெருவையும், செல்வமிக்க வணிகர் தெருவையும்,
அந்தணர் தெருவையும் கடந்து அரச மறுகினை அடைந்தார். அங்கு மதில் மீதுள்ள
கொடிகள் கண்ணனைக் காண வாருங்கள் என்று அழைப்பன போன்ற
காட்சியையும், அந்தணர் முதலியோருக்கு அளிக்கும் கொடைநீ்ர் ஆறாகப்
பெருகிஓட