கொண்டே இருக்கிறேன். உனக்கு மணம் முடிந்ததா? மக்கள் எத்துணைப் பேருளர்?
அம்மக்கள் கல்வி அறிவு நற்குண நற் செய்கைகளிற் பயின்று சிறந்துளரா?
மக்களால் பெற்றோருக்குப் பெருமை உண்டாக வேண்டும்; மனைவியும்
வருவாய்க்குத் தக்க செலவு செய்து வாழ்க்கையை நடத்த வேண்டும்; வீட்டிலுள்ள
குற்றங்குறைகளை வெளியில் தூற்றாதிருக்க வேண்டும்; நின் மனைவியிடத்தில்
இத்தகைய நற்குணங்கள் நிறைந்து விளங்குமென்று நம்புகின்றேன். நின் ஊரில்
மழை குறையாது பெய்து நல்லவளம் உண்டா?"
"நண்ப! முன்னொரு நாள் நம் குருபத்தினி அடுப்பில் எரிக்க
விறகில்லையென்று கூற உடனே நாமிருவரும் பக்கத்திலுள்ள காட்டிற் சென்று
விறகுகளை ஒடித்துக் கட்டினோம். வானில் மேகம் மின்னலுடன் இடித்து மழை
பொழிந்தது. சூறாவளியும் தொடர்ந்து சுழன்றடித்தது. நிற்கவும், இருக்கவும்
இடமில்லாமல் அங்குமிங்கும் மேடும் பள்ளமும் அறியாதபடி இருளில்
ஓடிவாடினோம். ஞாயிறு தோன்றச் சில நாழிகை முன்னர் நம்மைத் தேடி நம்குரு
சாந்தீப முனிவர் விரைந்து வந்து கொண்டிருந்தார். கண்டதும் வணங்கினோம்.
அவர் நம்மைக் கட்டித் தழுவி 'மாணவர்களே! உங்களைப்போன்று ஆசிரியர்க்காகக்
காடடைந்து கடுந்துயர் படு வாரைக் கண்டிலேன். நீங்கள் இருவரும் நல்லொழுக்கம்
நிறைந்தவராய், நல்ல மனைவி மக்களுடன் வாழ்ந்து முத்திப் பேற்றை மறவாது,
நல்லறம், தவம் புரிந்து, யாவர்க்கும் இனியவராய், நன்கு நீடு வாழ்க' என்று
வாழ்த்தித் தம் வீட்டிற்கு நம்மை அழைத்துச் சென்றனரே! அந்நிகழ்ச்சி
நினைவிலிருக்கின்றதா?" என்றும் வினவினர்.
"நண்ப! நாள்பல கழித்து என்னைப் பார்க்க வந்தனை; எனக்குச்
சி்ற்றுணவாவது உன் மனைவி கொடுத்தனுப்பாதிருப்பளா? கொண்டு வந்ததை
எனக்கும் சிறிது கொடுத்து மகிழ்விக்க லாகாதா? அதோ உன் தோளில் தொங்கும்
முடிச்சு என்ன? அதனைக் கொடு" என்று சொல்லிக் குசேலன் தோளில் இருந்த
கந்தைப் பொட்டணத்தை
|