என்று நூல்கள் கூறும். பற்றொழிந்த போதே துன்பங்களும் பறந்தோடும்.
பற்றுடையவரைத் துன்பம்யாவும் தொடர்ந்து வந்து பற்றிக்கொள்ளும்;
அஞ்ஞானத்தாற்பற்று உண்டாகும். மெய்ஞ்ஞானந் தோன்றியபோது பற்றும் ஒழிந்து விடும்; எல்லாவுயிர்க்கும் எப்பொழுதும் எழுவகைப் பிறப்பையும் விளைப்பது அவா
ஒன்றேயாம்; அவா நீங்கியபோதுதான் பிறப்பும் நீங்கும்; வேண்டாமை என்ற
விழுச்செல்வம் போன்ற செல்வம் யாண்டும் இல்லை. அச்செல்வத்தை யடைந்தவரே
சிறந்தவராவர். பொருட் செல்வமுள்ளவன் கடவுளை நினைத்துக் கண்மூடியிருக்க
வழியுண்டோ? வருவார் போவாரை யழைக்கவும் விடுக்கவும் அன்புடன் பேசவும்
அவர்கள் வேண்டும் பொருள்கள் அளிக்கவும் பொழுது காணுமோ? இரவும் பகலும்
இவ்வேலையி லிருந்தாற் சிந்தை யமைதி எந்தவிதம் வந்து சேரும்? தெய்வம் வந்து
சிந்தையிற் குடி கொள்ளுமா? என்று பலவாறு எண்ணிச் செல்வத்திற்கு அஞ்சி
இத்துன்பங்கள் எல்லாம் நீங்கத் திருமாலை வணங்குவதே நன்றெனக் கருதி
வணங்கினர்.

எழுதாத மறை நூல்களைக் கவர்ந்து கடலிற் புகுந்த கள்ளனாகிய சோமகன்
உயிரைத் தொலைக்க மீனமாய்த் தோன்றிய விமலா! பாற்கடல் கடைந்தபோது மந்தர
மலை கடலுள் அழுந்த அதனைத் தாங்குவதற்காக ஆமைருயு வெடுத்த
அண்ணலே! பூமியைப் பாயாகச் சுருட்டிப் பாதலத்திற் சென்ற பொற்கண்ணன் உயிர்
தொலைக்கப் பன்றியாய் வந்த பரந்தாமா! இரணியனைக் கொல்லத் தூணில்
நரசிங்கமாகத் தோன்றிய நம்பா! மாவலி செருக்கை மடிப்பதற்கு வாமனவுருவாய்
வந்த மாலே! மறையோரைப் பேணாது செருக்குற்ற வரம்பழிந்த மன்னர் குலத்தை
மடிக்கப் பரசுராமனாய்ப் பாரில் உதித்த பரம் பொருளே! இராவணன் முதலிய
அரக்கரைத் தொலைக்கத் தசரதன் மதலையாய்த் தாரணயி்ல் வந்து இராமன் என்ற
பெயர் பூண்ட எம்பெருமானே! வாசுதேவன் தேவகிக்கு மகனாகப் பிறந்து
பிரலம்பன் முதலிய கொடியோரை மடிவித்த பலராமப் பெயர் பூண்ட பரம்
பொருளே! இந்நாளிற் கண்ணன் என்ற