தேவகி வயிற்றிற் பிறக்கும் ஆண் மகவு உன்னைக் கொல்லும் என்று கணிதர்
கூறிய நாள் முதல் தேவகியையும் அவள் கணவனாகிய வாசுதேவனையும் சிறை
வைத்துப் பிறந்த மகவனைத்தையுங் கொன்றவன்; நந்தகோபன் மனையில்
வளர்கின்றான். அவனே தன்னைக் கொல்வானென்றறிந்து பல சூழ்ச்சியாற் கொல்ல
முயன்றவன்; கண்ணனாற் கொல்லப்பட்டவன். தந்தையையுஞ் சிறை வைத்த
கொடியவன். (92. 253, 686)

கண்ணன்:- வாசுதேவனுக்கும் தேவகிக்கும் மைந்தனாகப் பிறந்தவன்;
நந்தகோபனுக்கும் அசோதைக்கும் வளர்ப்புப் புதல்வனாக வந்தவன்; சாந்தீப
முனிவன்பாற் கல்வி கற்றவன்; குசேலனுடன் ஒருங்கு கற்றவன்; வடமதுரையிலும்
துவாரகையிலும் அரசு புரிந்தவன்; கஞ்சனால் விடுத்த சகடாசுரன், பூதனை
முதவியவர்களைக் கொன்று முடிவிற் கஞ்சனையுங் கொன்றவன்; பாண்டவர்க்குப்
படைத் துணையாகிப் பார்த்தன் தேர்ப்பாகனாயமர்ந்து பல சூழ்ச்சி புரிந்து பாரதப்
போரை முடித்தவன்; திருமால் பிறப்பில் ஒன்பதாம் பிறப்பாகக் கண்ணனைக்
கூறுவர். 2(பா)

கரன்:- விச்சிரவா என்பவனுக்குச் சாகை என்பவளிடம் பிறந்தவன்; இவனுடன்
பிறந்தவர்கள் தூடணன். திரிசிரா என்பவர்; இவர் மூவரும் சூர்ப்பணகையழைக்க
வந்து இராமன் இலக்குவனோடு போர் புரிந்து படைகளும் தாமும் அழிந்தனர். (671)

கவந்தன்:- இவன் ஒரு கந்தருவன்; தூலகேசன் என்ற முனிவன் சாபத்தால்
அரக்கனாயினன்; இந்திரனோடெதிர்த்துப் போர் புரிந்தபோது அவன் வச்சிராயுதத்தை
யேவ அப்படை அவனுடைய தலையையும் காலையும் மோதி வயிற்றிற்
புதையுமாறு செய்ய அதனாற் கவந்தன் என்ற பெயர் பெற்றவன்; இராமனும்
இலக்குவனும் சீதையைத் தேடி வரும்போது அவர்களைப் பிடித்து விழுங்க முயன்று
அவர்களாற் கொல்லப்பட்டவன். பின் சாப நீங்கி இராமனைத் துதித்துப் பழைய
கந்தருவனாகிச் சென்றவன் (672)

கவுரி;-உருக்குமணியால் வணங்கப்பட்ட காளியின் பெயர். இவள் வரம்பெற்று
உருக்குமணி கண்ணனை மணந்தாள். (692)

காசிபன்;-இவன் ஒரு முனிவன்; அதிதி, திதி என்ற இருமங்கையர்க்கும்
கணவன்: அதிதி வயிற்றில் முப்பத்து முக்கோடி தேவர்களையும், திதி வயிற்றில்
அறுபத்தாறு கோடி அசுரர்களையும் பிறப்பித்தவன்.(666)

காலயவனன்:-கண்ணன் பகைவர்களில் ஒருவன்; இவன் வடமதுரையைப்
படையுடன் முற்றுகையிட வருவதை நாரதர் கூறக் கேட்ட அஞ்சியோடுபவன் போல்
ஓடி மலைக்குகைக்