சத்திராசி்த்து:- சத்தியபாமையின் தந்தை; சூரியன்பால் சியமந்தக மணி
பெற்றவன்; அம்மணியைப் பிரசேனனிடம் கொடுக்க அவனிடமிருந்து ஒரு சிங்கம்
கவர, அதனிடமிருந்து சாம்பவந்தன் என்ற கரடி கவர்ந்து. தன் மகள்
தூங்குமிடத்தில் வைக்க, இதனையறியாது கண்ணன் கவர்ந்தான் எனப் பழி கூறக்
கண்ணன் அப்பழிக்கு அஞ்சிச் சாம்பவந்தனோடு போர் செய்து வெற்றி பெற்று
அம்மணியைக் கவர்ந்து கண்ணன் கொடுக்க வாங்கியவன்; பின்பு தன் மகளாகிய
சத்தியபாமையையும் அம்மணியையும் கண்ணனுக்கே கொடுத்தவன். கண்ணன்
அம்மணியை மீண்டும் தரப்பெற்றுக்கொண்டவன்; சததனுவா என்பவன் தனக்குச்
சத்தியபாமையை மணஞ்செய்து கொடுக்குமாறு கேட்க மறுத்தவன். மறுத்த
காரணத்தால் அந்தச் சததனுவா என்பவனாற் கொல்லப்பட்டவன். (693)

சததனுவா:- சத்திராசித்துவைக் கொன்றவன்; சத்திய பாமையைத் தனக்கு
மனைவியாகக் கொடாத காரணத்தால் சிய மந்தக மணியைக் கவர்ந்தவன்;
கண்ணனுக்கு அஞ்சியோடி அக்குரூரரிடம் அம்மணியைக் கொடுத்தவன்;
விதர்ப்பநாடு சென்றவன்; அந்நாட்டிலிருந்தபோது கண்ணனாற் கொல்லப்பட்டவன்.
(695)

சம்பரன்:- கஞ்சனுக்கு நண்பரில் ஒருவன். கண்ணனுக்கு உருக்குமணி
வயிற்றிற் பிறந்த குழந்தையை ( பிரத்தியும்நனை ) ஒருவருக்குந் தெரியாமல்
எடுத்துக் கடலில் எறிந்தவன். அக் குழந்தையை ஒரு மீன் விழுங்க, அம்மீனைப்
பிடித்து அறுத்த மாயாதேவிக்கு அக்குழந்தை அகப்பட அவள் வளர்க்க வளர்ந்த
பிரத்தியும்நனாற் கொல்லப்பட்டவன். (693)

சமதக்கினி:- இருசிக முனிவருக்கும் காதியின் மகளான சத்தியவதிக்கும்
பிறந்த ஒரு புதல்வன்; இரேணுகை என்பவளை மணந்த கணவன் (667)

சரபங்கன்:- இவன் ஒரு முனிவன்; இராமனைக் கண்டு வணங்கிய பின்
இறக்க வேண்டும் என்பது இவன் கருத்து; இவன் கருத்தறிந்து இராமன் சரபங்க
முனிவன் ஆச்சிரமம் சென்றான். வணங்கியவுடனே மனைவியும் தானும் நெருப்புட்
குளித்து முத்தியடைந்தான். (671)

சராசந்தன்:- மகதம் என்ற நாட்டு மன்னன்: பிருகத்திரனுக்கு மைந்தனாகப்
பிறந்தவன்; இவன் மருமகன் கஞ்சன்; கஞ்சனைக் கண்ணன் கொன்றது தெரிந்து
பதினெட்டு முறை கண்ணனோடு எதிர்த்துப் போர் புரிந்து கண்ணனை
வடமதுரையை விட்டுத்துவாரகை செல்லும்படி துரத்தி வென்றவன்; வீமனோடு
எதிர்த்