அருஞ்சொற்பொருள் அகரவரிசை
 
அங்கணம் சாக்கடை
அச்சு உயிர்
அடவி வனம் 
அடிசில் உண்டி
அடுதல் கொல்லுதல்
அட்டு சமைத்து
அதர் வழி, நெறி
அதிதி விருந்தினர்
அப்பியத்தின் மேலாக்கல் கோட்டமின்றிச் செய்தல்
அம்மை முற்பிறப்பு
அரங்கு கூத்தர் ஆடுமிடம்
அரணம் பாதுகாவல்
அருவினை துறவு
அலங்குதல் விலங்குதல்
அலந்து துறவு
அலர்கதிர் பரந்த கதிர்
அலைவு சஞ்சலம்
அல் இரவு
அவத்தம் வீண்
அழிவு வறுமை
அழுக்காறு பொறாமை
அழுங்காது வருந்தாமல்
அளறு குழைசோறு
அறா குறைத்து
அறுதல் பற்றொழிதல்
அறுவகைச் சுவை கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உப்பு
அற்றம் சோர்வு, அழிவு
சிவஞானம்
ஆங்காரம் அகங்காரம்
ஆசாரம் ஒழுக்கம்
ஆசு பிழை
ஆடரங்கு நடனசாலை
ஆதன் அறிவில்லாதவன்
உம்பர் உலகு மேலுலகம்
உய்க்கும் அடைவிக்கும்
உய்தல் தப்பிப்பிழைத்தல்
உய்ப்பின் செலுத்தின்
உலகிதம் லௌகிதம்
உலந்தால் அழிந்தால்
உவத்தல் விருப்பு
உவர்ப்பு வெறுப்பு, வெறுக்கத்தக்க குணம்
உழக்க வருத்த
உழிதரும் அடையும்
உள்ளல் எண்ணல்
உறீஇ அடைந்து
ஊர்ப்பசை ஊர்ந்து செலுத்துகின்ற அவா
ஊற்றம் இறந்து பற்றைவிட்டு
ஊன் புலால், தசை
எயிறு பல்
எரி நெருப்பு
எரு அட்டி எருவிட்டு
எள்ளி இகழ்ந்து
எறிதல் அழித்தல்
எற்றே இஃதென்னே
என்பு எலும்பு
ஏகான்மவாதிகள் அத்துவைத சமயிகள்
ஏத்தல் புகழ்தல்
ஏத்தி புகழ்ந்து
ஏமம் உறுதி
ஏமாப்பு அரண், இன்பம்
ஏர் ஒத்த
ஏலாய் ஏற்றுக்கொள்ளாய்
ஏழை மூடன்
ஐம்புலன்கள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
ஐயம் அறவோர்க்கிடுவது
ஒக்கும் நிகர்க்கும்
ஒட்டி துணிந்து
ஒண்பொருள் சிறந்த செல்வம்
ஒப்புரவு யாவர்க்கும் ஒருபடித்தாய் உதவி செய்தல்
களிறு ஆண்யானை
களை நீக்கு
களை கட்டு களை பிடுங்கி
களை கண் ஆதரவு, பற்றுக்கோடு
கள் தேன்
கறுத்து வெகுண்டு
கனையிருள் நள்ளிருள்
கன்றி வருந்தி
கா காவடி
காட்சி அறிவு
காட்டதர் உலகநெறி
காணல் ஆராய்தல்
காமர் அழகு
காமுறூஉம் விரும்பும்
காய வெறுக்க
காய உரைத்த தவறு கண்ட வழி இடித்துரைத்தல்கை
காய்த்து வெகுண்டு
காரறிவினார் அறிவில்லாதவர்
காவிட்டு உதவுதலின்றி சவர்ச்
காழ் தூண்
கானம் காடு
கிடுகு சட்டப்பலகை
கிழக்கு பள்ளம்
கிளை சுற்றம், உறவு
கீதம் இசைப்பாட்டு
கீழ்கட்கு கயவர்களுக்கு
குஞ்சரம் யானை
குடர் குடல்
குதர் வீண்
குப்பைத்து குவியல்களையுடையது
குறும்பு அரண்
குறைக்கருமம் வேண்டிய நிலையிற் குறைந்த வினைகள்
கூதிர் குளிர்காற்று
கூர்தல் மிகுதல், நிறைதல்
கூற்றம் உயிரையும் உடலையும் கூறுபடுப்பது, யமன்
கெட்டார் தீயூழினையுடையார்
செல்கதி மறுமைப்பயன்
செறிவு அடக்கம்
செற்றம் பகை, நெடுங்காலமாகக் கொண்டுள்ள சினம்
சேறல் செல்லுதல்
சோதி ஞானவொளி
சோர சோரும்படி
சோற்றூர்தி உடல்
ஞமன் யமன்
ஞாலத்து உலகில்
தகவு தகுதி
தணிக்கும் போக்கும்
தணிப்பது போக்குவது
தண்டா சட்டமாக
தண்டாமம் நன்மையின் நீங்கிய மானம்
தண்டி மானமுள்ளவன்
தண்டு கதாயுதம்
தரியாய் பொருத்திராய்
தலைநிற்றல் மேற்கொண்டொழுகுதல்
தலைப்படல் அடைதல்
தலைப்படுத்துவார் தவறாமலடையக் கருதுகின்றவர்
தவர் முனிவர்
தவா தவறாத
தறுகட்பம் பெருமை, அஞ்சாமை
தறுகண் அஞ்சாமை
தா குற்றம்
தாரம் மனைவி
திகிரி சக்கரம்
திருட்டம் காட்சி
திருத்தப்படுவது நன்றாகச் செய்யத்தகுவது
திருவுடையோர் நற்பேற்றினையுடையார்
திரை அலை
திறம் செயல்
திறம்பா மாறுபடாத
திறவுரை உறுதிமொழி
நாப்பண் இடை
நாள்உலப்ப நாள் வீணேஅழியுமாறு
நிச்சலும் எக்காலத்தும்
நிரயம் நரகம்
நிறை மனத்தை நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க வழக்கங்கள், அறிவு
நிறை விளக்கு நந்தாவிளக்கு
நின்றுழி நின்றவிடம்
நீத்தல் நீங்குதல்
நீமம் ஒளி
நீம் அறிவு
நுடங்கு துவள்கின்ற
நெறித்து வாயைப் பிளந்து
நொறுங்கு நொய்
நோற்பவர் துறவிகள்
நோற்பார் தவம் முயல்வார்
நோவல் வருந்தல்
படும் ஆறு இயன்ற அளவு
படுவது அழிவது
பட்டாங்கிற் பன்னி உண்மையாகக் கூறி
பட்டாங்கு இயல்பு
பட்டிமை படிற்றொழுக்கத் துறவி வேடம்
பண்டி வண்டி
பந்தம் பாசக்கட்டு
பரிந்து விரும்பி
பரியாது இரங்காது
பரிவு துன்பம்
பலிமரீஇ பிச்சையேற்று
பழுது பயனற்றது
பறையாத இத்தன்மையதென் ஒழுகல்றியம்ப வொண்ணாத
பன்னுதல் விளக்கிச் சொல்லுதல்
பாசண்டம் புறச்சமய நூல்
பாத்து பகிர்ந்து
பால் உரிமை
பொல்லாப்பொறி தீயூழ்
பொறி நல்லூழ்
பொறியிலி பேதை
போகம் செல்வம்
போதரவு வரவு
போந்த வந்தன
போலி பிழை
போழ்தல் பிளத்தல்
போற்றி வளர்ந்து
மடங்கல் சிங்கம்
மண்ணீடு சிறுவீடு
மதி சந்திரன்
மயக்கம் அறியாமை
மயங்கி கலந்து
மலைவு மாறுபாடு
மல்கிய நிறைந்த
மறம் பாவம்
மறிதல் மடங்குதல்
மறு குற்றம்
மறைத்து துடைத்து
மனைவாழ்தல் இல்லறத்தில் வாழ்தல்
மன்னுயிர் நிலைபெற்ற உயிர்
மாண்ட மாட்சிமைப்பட்ட
மாண்பு பெருமை
மால் மயக்கம், பெரிய
மானம் பெருமை
மிசை மீது
மீக்கூற்றம் புகழ்
முக்குடை சந்திராத்தியம், நித்திய விநோதம், சகலபாசனம்
முதல் நின்று முதலிலிருந்து
முடை அழுகல், நாற்றம்
முனியாது வெறுப்பின்றி
முன்னி கருதி
முழை அகப்பை
ஆதி ஆளாகின்றாய்
ஆர்த்தி உண்பித்து
ஆர்வம் ஆசை
ஆர்வில் நிரம்புதற்கொண்ணாத
ஆவட்டை மரணமடையும் நிலை; ஒரு பூண்டுமாம்
ஆழி கடல்
ஆள்வினை முயற்சி
ஆற்றல் பொருத்தல்
ஆன்ற மேலான
இடுக்கண் துன்பம்
இட்டிகை செங்கல்
இந்தியக்கு இந்திரியத்துக்கு
இம்மை இப்பிறப்பு
இருநால்வர் எண்வினை [குறிப்புப் பார்க்க]
இருள் நரகம்
இலேசு எளிது
இல் மனைவி
இல்லவர் இல்லறத்தார்
இழித்துரைத்தல் இகழ்ந்து கூறல்
இழுக்கு பழி
இறந்தும் மிகவும்
இறுவரை கற்கள் நெருங்கின மலை
இறைமை தலைமை
ஈண்டு இங்கே; நெருங்கிய
ஈர்த்தல் இழுத்தல்
ஈத்து கொடுத்து
உசா ஆராய்ச்சி
உசாத்துணை ஆராயும் துணைவன்
உணர்ச்சி அறிவு
உண்டு நுகர்ந்து
ஒரு நன்கு மதிக்கப்படுதல்
ஒருங்கு முழுவதும்
ஒருதலை உறுதி
ஒருவாது நீங்காது
ஒல்கா தளராத
ஒவ்வா மாறுபட்ட
ஒவ்வுதல் ஒப்பாதல்
ஒறு அடக்கு
ஒறுத்தல் துன்புறுத்தல்
ஒற்றி அடைமானமாய் கொண்ட
ஒன்றல் பொருந்தல்
ஓச்சி ஓங்கி
ஓத்து கல்வி
ஓம்புதல் பாதுகாத்தல், மேற்கொள்ளல்
ஓர்த்து ஆராய்ந்து
ஓர்ப்பு துணிவு
ஓவாதே ஒழிவின்றி
கஞ்சத்துள் அப்ப வருக்கத்துள்
கடி போக்கு
கடுவினை தீவினை
கடைப்பிடித்து உறுதியாகக் கொண்டு
கடையாயார் கயவர்
கட்டளை செங்கல் அறுக்குங்கருவி
கட்டு பாசம், தளை, உறுதி
கட்டுரை உறுதிமொழி
கதி பிறவி
கதிப்பட்டநூல் ஞான நூல்
கதுப்பு கூந்தல்
கயக்கு சோர்வு, கலக்கம்
கரகம் கமண்டலம்
கரவு தீய எண்ணம்
கரி சான்று
கலம் பாண்டம்
கலாய் கோபங்கொண்டு
கலுழ்தல் அழுதல்
களி கட்குடியன், மயக்கம் தாய் உதவி செய்தல்
கொணர்தல் கொண்டுவருதல்
கொண்டாடல் மேற்கொளல்
கோடு கோணல்
கோடும் அடைவோம்
கோட்டு நாள் விதித்த நாள்
கோதப்படுமேல் குற்றப்படுத்தப் படுவானானால்
கோது குற்றம்
கோதை கூந்தல்
கோலி வளைத்து
கோல் திரண்ட
கோள் கொள்கை, பொய், கற்பு
சகடு சக்கரம்
சந்தித்து பொருந்தி
சம்பிரதம் சித்து
சம்பிரதவாழ்க்கை மாய வாழ்க்கை
சலங்களை தீவினைகளை
சவர்ச்  செய்கை வெறுக்கத் தக்க இழிந்த செய்கை
சாக்காடு மரணம்
சாந்து சந்தனம்
சால மிக
சாலத்தலை மிகவுயர்ந்தன
சார்வு பற்றுக்கோடு
சாற்று சொல்
சிட்டன் ஞானி
சிதையும் அழியும்
சித்து வியத்தஞ்செய்து, மாயவித்தை
சிந்தை அவா
சிறுகாலை இளம்பருவம்
சீரை மரவுரி
சீலம் நல்லொழுக்கம்
சுணங்கு தேமல்
சுரிகை உடைவாள்
சுலாக்கோல் தடி
சூர் தெய்வம்
சூன்று ஆராய்ந்து
செயிர் குற்றம், தீமை
தீக்கருமம் தீவினை
தீர்வில் நீங்குதலில்லாத
துஞ்சா அழிவில்லாத
துஞ்சினாய் இறந்தாய்
துணித்தல் துண்டாக்கல்
துப்பு நுகர்பொருள்
துப்புரவு அனுபவித்தல்
துய்த்தல் அனுபவித்தல், நுகர்தல்
துருக்கம் கத்தூரி
துறவுடைமை பற்றுவிடுதல்
துன்னல் தைத்தல்
தெண்ணீர் தெளிந்த நீர்
தெருள் அறிவு
நீங்தெற்ற மாறுபட
தெற்றிற்று செலுத்தப்படாமல் தடைப்பட்டு
தெற்றென கடுக
தேம் இனிமை
தேம்பிவிடுதல் அழிந்துவிடுதல்
தேய்ந்து அழித்து
தேர்ந்து ஆராய்ந்து
தேறாதவன் தெளியாதவன்
தேறி தெளிந்து
தேற்றம் தெளிவு
தொக்க கூடிய
தொண்டு அடிமை
தொலைவின் துணிவு அழிவின் நிச்சயம்
தோல்காவி கல்லாடை
தோற்றம் பிறப்பு
நடாஅய் நடத்தி
நண்பு நட்பு
நயந்து விரும்பி
நயன் நீதி
நலன் இன்பம்
நற்காட்சி மன அமைதியாலுண்டாம் அரிய கடவுட்டோற்றம்
நனைஇல இனிமைபயவாத
நன்மை உறுதி
நாட்டல் நிலைநிறுத்தல்
பாவிட்டார்க்கு விரும்பினவர்களுக்கு
பிச்சை இரப்போர்க்கிடுவது
பிடி பெண்யானை
பிணக்கன் மாறுபாடுகொண்டவன்
பிணி நோய்
பிணியாளன் நோயாளன்
பிறர்   இல் அயலார் வீடு
பின்நோக்கி முன்னேற்றத்தில் நோக்கமில்லாதவன்
புகா உணவு
புக்கில் உயிர்புகும் வீடு; உடல்
புரிந்து விரும்பி
புயல் மேகம்
புரைப்பு குற்றம்
புலால் இறைச்சி
புலைமயங்கி புலைமக்களோடு சேர்ந்து
புல்ல அடையுமாறு
புல்லப்படுதல் பற்றப்படுதல்
புல்லவை அற்பர்களது அவை
புல்லறம் பாவச்செயல்
புல்லான் அற்பன்
புறம்பெரிது பின்மிகும்
புன்மை துன்பம்
பூட்டுதல் பொருந்திச் செலுத்தல்
பெருங்களியான் மிக்க மயக்கத் தினையுடையான்
பேதமை அறியாமை
பேணாது விரும்பாமல்
பேழை பெட்டி
பேறு செல்வம்
பைங்கூழ் பசிய பயிர்
பொச்சாத்தல் மறந்து ஒழுகல்
பொச்சாப்பு மறதி
பொட்டப்பொடிக்கும் விரைந்து தோன்றும்
பொரு ஒப்பு
பொருதல் போர் செய்தல்
மெள்ள அமைதியாக
மேதை அறிவுடையான்
மேவரிய அடைதற்கரிய
மேவாது பொருந்தாது
மேலைப்பிறப்பு வரும்பிறப்பு
மேன்மை பெருமை
மைஆ மலட்டுப்பசு
யாத்தல் கட்டுதல்
வடு குற்றம்
வண்ணம் வடிவம், அழகு
வரைத்து எல்லையினையுடைத்து
வரை வறுத்த வறுவல்
வனப்பு அழகு
வாயில் வழி
வாய்த்து பொருந்தி
வான்சகடம் உயர்ந்த வண்டி
வான்மை உயர்வு
விடக்கு ஊர்தி இறைச்சியாலாகிய வாகனம்
விடுமாற்றம் போக்கும் உபாயம்
விண் ஆகாயம்
வித்தி விதைத்து உயிர்
விநயம் ஒழுக்கமுடைமை
விம்மாது மகிழாமல்
விழுத்து விழுந்து
விழைதல் விரும்பல்
விழையாமை விரும்பாமை
வீடு பிறவியறுத்தல்
வீட்டதர் வீட்டுநெறி
வீட்டுதற்கு அழிப்பதற்கு
வீறு பெருமை
வெஃகாமை விரும்பாமை
வென்றி வெற்றி
வேட்டு விரும்பி
வேய்ந்த மூடின
வைகலும் நாள்தோறும்
வைப்பு சேமநிதி