தொடக்கம்

பதினெண் சித்தர் பாடல்கள்

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண்
சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?

1. திருமூலர்,   2. இராமதேவர்,  3. கும்பமுனி,  4. இடைக்காடர்,  5.
தன்வந்திரி,  6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,  11. கொங்கணர், 12, பதஞ்சலி,  13. நந்திதேவர், 14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.   16. சட்டைமுனி,   17. சுந்தரானந்த தேவர்,   18.
கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச்
சித்தர், 4. சதோகநாதர்,  5. இடைக்காட்டுச் சித்தர்,  6. குதம்பைச் சித்தர், 7.
புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9. மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச்
சித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14.
விளையாட்டுச் சித்தர்,   15. பிரமானந்த சித்தர்,   16. கடுவெளிச் சித்தர், 17.
சங்கிலிச் சித்தர், 18. திரிகோணச்சித்தர்.

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும்
அடங்குவர்.

1. வான்மீகர், 2. பதஞ்சலியார்,  3. துர்வாசர், 4. ஊர்வசி,  5. சூதமுனி,
6. வரரிஷி,  7. வேதமுனி,  8. கஞ்சமுனி,  9. வியாசர், 10. கௌதமர் - இது
இன்னொரு  பட்டியல்.  பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர்
என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6.
போகர்,  7. சட்டைநாதர்,  8. பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11.
புலிப்பாணி, 12, அழுகணி,


முன்பக்கம்
அடுத்த பக்கம்