சிரிக்கும் பூக்கள்

கி.பி. 1901-இல் குழந்தைகட்கெனத் தனித்த கவிதைகளை எழுதினார்.
அவர் ஆசிரியராயிருந்ததால், மேனாட்டில் இருந்தது போன்ற தனித்த
குழந்தைக் கவிதைகள் தமிழில் இல்லையென்ற குறையை உணர்ந்து,
அக்குறை நீங்கும் வண்ணம் அருமையான பாடல்களை இயற்றினார்.

மேனாடுகளில் குழந்தை இலக்கியம்

இங்கிலாந்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவிலேயே பாதிரிமார்களும்
கற்றறிந்தோரும் குழந்தைகட்கெனத் தனியே பாடநூல்கள் எழுதலாயினர்.
ஆல்ட்கெல்ம்  (Aldhelm)  (604-709) என்னும் பாதிரியாரே இங்கிலாந்தில்
முதன் முதல் குழந்தைகட்குப் பாடநூல் எழுதியவர். அது வினா-விடைக்
கவிதை களாக அமைந்திருந்தது. அல்குயின்  (Alcuin)  என்பார் எட்டாம்
நூற்றாண்டில் எழுதிய பாடநூல் உரையாடல் முறையிலிருந்தது. பத்தாம்
நூற்றாண்டினராய ஏயெல்பிரிக்  (Aelfric)  எனும் கல்வியாளர் குழந்தைகள்
அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களைப் பாடு பொருளாகக்
கொண்டு வினா-விடை முறையில் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில்
குழந்தைகட்கான கலைக் களஞ்சியம் முதன்முதல் வெளிவந்தது.
எலூசிடாரியம்  (Elucidarium) எனப் பெயர் பெற்ற இக்களஞ்சியத்தைக்
காண்டர்பரியின் தலைமைப் பாதிரியாரான ஆன்செல்ம்  (Anselm)  (1033-
1109) என்பார் எழுதியுள்ளார். ஜான் அமோஸ் முகானமிஸ் என்பவரால்
எழுதப்பட்டு 1751-இல் வெளியிடப்பட்ட நூலே ஐரோப்பாவில்
முதன்முதலாகப் பட விளக்கங்கள் கொண்ட பாட