நூலாக அமைந்தது. குழந்தைகளின் விருப்புவெறுப்புகளை அறிந்து
அவர்களின் மன உணர்வுகளை நிறைவு செய்யும் வண்ணம் பதினெட்டாம்
நூற்றாண்டில் ஜான் நியூபெர் (1713-1767) என்னும் புத்தக விற்பனையாளர்
குழந்தைகட்கெனத் தொடர் வெளியீடாகப் பல நூல்களை வெளியிட்டார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குழந்தைகட்கெனப் படைப்
பிலக்கியங்களும் தோன்றலாயின.
தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சி
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையும்
நம்நாட்டில் நுழைக்கப்பட்டதால் அவர்களுடைய பாடநூல்களையொப்பத்
தமிழ்நாட்டுக் குழந்தைகட்கும் பாடநூல்கள் எழுதப்படலாயின.
தொடக்கப்பள்ளி மாணவர் கட்கென எழுதப்பட்ட நூல்களில் இடையிடையே
பாடல்கள் இடம்பெற்றன. ‘அ இது ஓர் அத்திப்பழம்....’ என்பது போன்ற
பாடல்களை முதன்முதலில் எழுதி வெளியி்ட்டவர் திரு.கா. நமசிவாய
முதலியார் ஆவர். அவரையொட்டி மணிமங்கலம் திருநாவுக்கரசு
அவர்களும், மயிலை சிவமுத்து அவர்களும், பாடநூல்களில் பாடல்கள்
எழுதினர்.
ஆணிவேர் அழ. வள்ளியப்பாவே
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்துதான் பாடநூல்கள்
அல்லாத குழந்தைகட்கென்றே தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள்
வெளிவரலாயின. இவ்வகையில் முன்னோடியாக விளங்கியவர் அழ.
வள்ளியப்பா அவர்களே! அவர் எழுதிய குழந்தைக் கவிதைகள்
|