லிப் பாடல்கள் (Nonsense Rhymes) எனப்படும். நம் குழந்தைக்
கவிஞரோ ஒலி நயத்தோடு பொருளுக்கும் இடந்தந்து இனியபாடல்கள்
பலவற்றைப் படைத்துள்ளார்.
அண்ணாமலை அண்ணாமலை
என்ன சொன்னானாம்?
ஆனை முதுகில் ஏறிச்செல்ல
ஆசை என்றானாம்!
கத்திக் கப்பல் செய்து வைத்தேன்
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்
வா, மழையே, வா
வா, மழையே, வாஎனும் பாடல்கள் சான்றாம். சொன்ன சொற்களே மீண்டும் மீண்டும் வருமாறு
பாடுவது குழந்தைகளை எளிதில் கவரும் தன்மையதாம். அவ்வுத்தி
இப்பாடல்களிலும் இன்னும் இவையொத்த வேறுசில பாடல்களிலும்
கையாளப்பட்டுள்ளது.
சின்னச் சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக் காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன் எனும் முதல் பாடல் தொடங்கி நூல் முழுதும் நிறைந்துள்ள ஒலி நயப்
பாடல்கள் நம்மை முருகனின் புன்சிரிப்பினும் மயக்குவதைக் காண்கிறோம்! நாட்டுப் பற்றாளர் ‘நான் இந்தியன்’ என்று சொல்வதில் ஒவ்வொருவரும்
பெருமைகொள்ள வேண்டும். காஷ்மீர்
|