சிரிக்கும் பூக்கள்
xvi

கவிதைத் துறையில் ஒப்பாரும் மிக்காருமின்றி ஓங்கி வளர்ந்துள்ள இமயம்
அவர்! அதன் அடிவாரத்தில் நின்று எவ்வளவு நிமிர்ந்தாலும் உச்சியை
எவ்வாறு காணமுடியாதோ, அது போன்ற நிலையதே என்னுடைய இவ்வுரை!
நெஞ்சில் குறிஞ்சித் தேனைப் பாய்ச்சும் நம் குழந்தைக் கவிஞர் வாழ்க!
அவர்தம் கவிதைத் தொண்டு வளர்க!
    

                                    அன்பன்,
சு. செல்லப்பன்

20-5-86