சிரிக்கும் பூக்கள்
xv

நன்னம்பிக்கையாளர்

குழந்தைகளை ஊக்கப்படுத்தி உயர்நிலைக்கு அவர்களைக்
கொண்டுவர கவிஞர் பெரிதும் முயல்கிறார்.

                   ஏடு தூக்கிப் பள்ளியில்
                      இன்று பயிலும் சிறுவரே
                   நாடு காக்கும் தலைவராய்
                      நாளை விளங்கப் போகிறார்!

என்பது அழ. வள்ளியப்பாவின் அமுத மொழி. அதேபோல இந்நூலுள்ளும்

                   ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
                     எத்தனை துன்பப் பட்டாலும்
                    நாளைய தலைவர் ஆவதற்கு
                     நாளும் முயற்சி செய்திடுவேன்!

எனும் இப்பாடல் ‘இன்று குழந்தைகளேயாயினும் இனி இந்த நாட்டினை
ஆளப்பிறந்தவர் குழந்தைகளே’ என நம்பிக்கை கொண்டவர் கவிஞர்
என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

சுவைத்தேன் கவியாளர்

படிக்கப் படிக்க நெஞ்சில் சுவையேற்றும் பாத் தொகுப்பே சிரிக்கும்
பூக்கள் என்னும் இந்நூல். அழ. வள்ளியப்பாவின் பாடல் ‘அப்படியிருக்கிறது,
இப்படியிருக்கிறது’ என்று நான் சொல்ல முயல்வது பிள்ளையே பெறாதவள்,
பல பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பது போலாகும்! குழந்தைக்