எனப் பாடிப் போந்துள்ளார்.
"அவளும் அவனும், தமிழன் இதயம், சங்கொலி, காந்தி
அஞ்சலி" போன்ற பாடல்கள் படித்து இன்புறத்
தக்கன.
மகாகவி
பாரதியார்மீது "படித்தறியா மிக ஏழைக்கிழவனேனும்"
என்று தொடங்கும் பாடலானது பாரதியின் தரத்தையும்
திறத்தையும்
அளந்து காட்ட வல்லதாகும்.
"மடமையதோ
பிறநாட்டார் மயக்கந்தானோ?" என்ற
தொடக்கத்தைக் கொண்ட வ.உ.சி. பற்றிய பாடல்
தொகுப்பானது
அவரது புகழைப் பரப்புவதாகும்.
"காந்தி வழி பழசா?" என்று தாமே வினா
எழுப்பி அதற்கு
விடையளிக்கும் வகையிலே பல பாடல்கள் புனைந்தளித்தார்.
|