"பெற்றெடுத்த தாய் மிகவும் பழசாய்ப் போனாள்" என்றும் 
தொடங்கும் இருவேறு பாடல்கள் சிறப்பு வாய்ந்தன.

இந்நூல் தொகுப்பினை நன்முறையில் அச்சிட்டு உதவிய பூம்புகார்
பதிப்பகத்தார்க்கும் இந்நூல் வெளியிடுவதற்குப் பல்லாற்றானும் உதவிபுரிந்த
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பாடல் தொகுப்பில் கூறப்பட்டுள்ள சீரிய கருத்துகள் அனைத்தும்
நாட்டின் நலங்கருதிப் பாடப்பட்டுள்ளனவாகும். அவற்றைத் தெளிந்து கற்றுணர்ந்து
நற்பயன் பெறுவீராக!  

சிவ. கன்னியப்பன்