நாமக்கல் கவிஞர்
வாழ்க்கை வரலாறு

தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ள பரனூர் 
என்ற கிராமத்தில் வெங்கட்ராமப் பிள்ளை பிறந்தார். அங்கே கொடிய 
பஞ்சம் ஏற்பட்டது. அதனால் பிழைப்புக்காகச் சேலத்துக்கு வந்தார். 
சேலத்தில் பல உறவினர்கள் இருந்தனர். சூரமங்கலம் இரயில்வே 
போர்ட்டர் வீரப்பப் பிள்ளை என்பவருடைய மனைவி அங்கம்மாள் 
மிகவும் நெருங்கிய உறவு. அங்கம்மாளின் அன்பான ஆதரவினால் 
வெங்கட்ராமப் பிள்ளையின் வாழ்வு மலர்ந்து விளங்கியது.

வெங்கட்ராமப் பிள்ளை ‘ஏட்டாக'ப்  பணிபுரிந்து கொண்டிருந்த
காலத்தில்தான் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எட்டாவது ஆண் 
குழந்தையாகப் பிறந்தார். முதல் மூன்று பெண் குழந்தைகள் அடுத்து 
நான்காவது ஆண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. பிறகு 
பிறந்த மூன்று குழந்தைகளும் பெண்களே! "ஐந்து பெண் குழந்தைகளைப் 
பெற்றால் அரசனும் ஆண்டி யாவான்" என்றால் ஆறு பெண்களைப் 
பெற்ற வெங்கட்ராமப் பிள்ளையும் அம்மணி அம்மாளும் என்ன 
செய்வார்கள்!  ஓர் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் 
அவர்களது உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. பல தெய்வங்களை வேண்டி 
விரதம் இருந்தனர். அவர்கள் செய்யாத தருமம் இல்லை. 

காவிரியாற்றின் வடகரையில் உள்ள தம் கிராமமாகிய மோகனூரில்
உள்ள கருப்பண்ணசாமியிடம்