பக்கம் |
வரி |
|
1 |
14 |
'என் விழற் கிடமிலை' |
8 |
17.18 |
'எருதீன் றெனமுன மென்னகன் றென்று திரிபவ ரொப்ப' |
8 |
32 |
'தலைவிதி தடுக்கற் பாற்றோ?' |
9 |
38 |
'முதலையின் பிடிபோல்' என்பதை 'முதலையும் மூர்க்கனுங் கொண்டது விடா' என்பதனோடு ஒப்புநோக்குக. |
12 |
147 |
'நெருப்பையுங் கறையா னரிக்குமோ?' |
15 |
39 |
'எடுப்பார் கைப்பிள்ளை' |
16 |
46 |
'மணற் சோற்றிற் கற்றேடுதல்' |
18 |
110 |
'பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ?'
(கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுக்கவா?) |
19 |
119 |
'பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?'
(பிள்ளையைப் பெற்றுப் பேய்க்குக்
கொடுக்கவா?) |
19 |
126 |
'அழகிருந் தென்பயன்?' 'தொழிலெலா மழிவே'
(ஆளைப் பார்த்தால் அழகுபோல, வேலையைப்
பார்த்தால் இழவுபோல.) |
21 |
173 |
'எரிமேலிட்ட இழுது' (அனலிற்படு நெய்போல்) |
23 |
7 |
'தாய்க்கு மொளித்த சூலோ?' (தாய்க்கொளித்த சூலா?) |
24 |
37-38 |
'பரிதி வந்துழி யகலும் பனியென' (சூரியனைக் கண்ட பனிபோல;இன்பனிக்கு இனன் என) |
25 |
76 |
'நேசமில் வதுவை நாசகாரணமே' |
26 |
114-15 |
'கன்னியா யிருப்பா யென்றும் சம்மதம்' |
27 |
120 |
'நான் பிடித்த முயற்கு மூன்று கால்' |
28 |
169 |
'புளியம் பழமுந் தோடும் போலாம்' |
31 |
1 |
'புத்தியே சகல சத்தியும்' 'Knowledge is Power. (Bacon)' 'புத்திமானே பலவான்' |
31 |
9 |
'பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்' |
32 |
46 |
'போர் வந்திடி லிவண் நேர்வந்திடும் எலாம்' (கலகம் பிறந்தால் நியாயம்
பிறக்கும்) |
36 |
39 |
'ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை?' 'Necessity has no law' |
42 |
226 |
'கால விளம்பனஞ் சாலவுந் தீதே'(Delay is Dangerous) |
43 |
260 |
'அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ?' (கைப்புண் பார்க்கக் கண்ணாடி வேண்டுமா?) |
44 |
283 |
'கரும்பு கைப்பதுன் வாய்க்குற்றம்மே' |
44 |
286 |
'வெளுத்த தெல்லாம் பாலா' 'மின்னுவ தெல்லாம் பொன்னா'?'All that glitters is
not gold' |
45 |
304 |
'நெருப்பாறும் மயிர்ப்பாலமும்' |
54 |
9 |
'சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து' |
58 |
113-19 |
'வண்டு மலரிடை யணைய வுன் னாட்டிற் கொண்டுவிடுவரே போலும்' (பலாப்பழத்துக்கு
ஈப்பிடித்து விடவா?) |
60 |
179-80 |
'அப்பந் தின்னவோ, அலால் குழி யெண்ணவோ செப்பிய துனக்கு' (எச்சிலை யெடுக்கச்
சொன்னதா? எத்தனை பேரென்றெண்ணக் கேட்டதா?) |
62 |
14 |
'கெஞ்சிடின் மிஞ்சுவர், மிஞ்சிடிற் கெஞ்சுவர்' |
66 |
144-5 |
'புலி வேட்டைக்குப் பொருந்துத் தவிலடி எலி வேட்டைக்கு மிசையுமோ' |
67 |
162 |
'கள்ள மனந்தான் துள்ளும்' |
|
163 |
'தன்னுளந் தன்னையே தின்னும்' (தன்னெஞ்சே தன்னைச் சுடும்) |
|
164 |
'குற்றமுள்ளோர் கோழையர்' |
72 |
131 |
'கைதொடின் மஞ்சளுங் கரியாகும்மே' |
75 |
208 |
'ஜனமொழி தெய்வமொழி' |
80 |
23 |
'இலவு காத்த கிளி' |
80 |
24 |
'நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணல்' (மொய்க்கு நெய்க்குடந்தன்னை யெறும் பென்னவே -
திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்.) |
85 |
84 |
'இரவியை நோக்கற்கேன் விளக்குதவி' யானை பார்க்க வெள்ளெழுத்தா? |
90 |
66 |
'சுட்டதோர் சட்டிகை விட்டிடலென்ன' (சட்டி சுட்டதும் கைவிட்டதும்) |
95 |
244 |
'நெருப்பிடை யிழுதெனநெக்கு நெக்குருகி' |
99 |
31-2 |
'மீனுண்ணக் குளக்கரை யிருக்குங் கொக்கென அடங்கி' |
|
|
(ஓடு மீனோட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு) |
|
|
'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் |
|
|
குத்தொக்க சீர்த்த விடத்து' - (குறள் 49-10) |
113 |
4 |
'நெருப்பிடை நெய் சொரிந்தற்று' (எரிகிற வயிற்றில் எண்ணெய் ஊற்றினாற்போல்) |
115 |
47 |
'இருதலைக் கொள்ளியி லெறும்பானேன்' (இருதலைக் கொள்ளியினுள் ளெறும்பொத்து) -
திருவாசகம்;நீத்தல் விண்ணப்பம். |
|
49-50 |
'ஓர்சிறு மயிரினை யிழக்கினு மாயுமோ கவரிமா' |
|
|
'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் |
|
|
உயிர்நீப்பர் மானம் வரின்' - (குறள் 97-9) |
116 |
75 |
'பருதிகண்டன்றோ பங்கயம் அலரும்!' |
118 |
135-6 |
'கண்ணிடு மணல்போல் உறுத்துவ' (கண்ணில் மண்ணள்ளிப் போட்டதுபோல்) |
126 |
24-25 |
'வேலியே தின்னில் தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர்' (வேலியே பயிரைத்
தின்றால்.....) |
126 |
31-32 |
'எலிப்பகை தொலைக்க இருந்த தன் வீட்டில் நெருப்பினை யிடல் போல' |
132 |
183 |
'கெட்டார்க் குலகி னட்டாரில்லை' |
|
|
'கெட்டார்க்கு நட்டாரில்' - (குறள் 130-3) |
|
|
'கெட்டார்க்கு நட்டாரோவில்' (பழமொழி 59) |
133 |
191 |
'எரியிடுவானோ இல்லிடை?' |
134 |
216-7 |
'கருமருந்தறையிற் சிறுபொறி சிதறினும் |
|
|
பெருநெருப்பன்றோ' (காட்டுத் தீப்போல் பரவியது) |
142 |
174 |
'கைக்கெட்டியது தன் வாய்க் கெட்டுதற்குள்' (கைக்கெட்டினது வாய்க் கெட்டாமற்
போதல்) |
|
|
'Many a slip between the cup and the lip' |
148 |
364 |
'சம்மதக் குறியே மௌனம்' (Silence implies consent) |
157 |
9 |
'கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு' (ஏழை சொல் அம்பல மேறுமோ?) |
158 |
30 |
'நொந்த புண்ணதனிலே வந்திடும் நூறிடி' (பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' |
|
|
'Misfortune never comes single' |
158 |
33 |
'மூடிடில் தீயும் மூளு மும்மடங்காய்' |
164 |
40 |
'வைத்ததாராயினென்? வெந்தது வீடு!(யார் வைத்த தீயோ வீடு வெந்தது சரி) |
166 |
75-76 |
'ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே' |
|
|
'பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே' |
|
|
(ஆட்பாதி யாடைபாதி) (செந்தமிழும் நாப்பழக்கம்) |