பக்கம் |
வரி |
|
3 |
64-8 |
'வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற் |
|
|
சந்தனா டவியுஞ் சாடி வந்துயர் |
|
|
குங்கும முறித்துச் சங்கின மலறும் |
|
|
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில் |
|
|
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி' |
|
|
“வேழ வெண்மருப் பெறிந்துவெண் ணித்திலம்
வரன்றிக் |
|
|
காழ கிற்றுணி சந்தொடு கையரிக் கொண்டு |
|
|
கோழ ரைச்செழுங் குங்குமத் தடஞ்சினை
சாடி |
|
|
ஆழ்தி ரைக்கடல் அகடுகீண் டொழுகிய தன்றே” |
|
|
“கங்கை யென்றுல கேத்திய கடவுள்மா நதிவெண் |
|
|
சங்கு சூலுளைந் தலறிய தடம்பணை தவழ்ந்து |
|
|
கொங்கு யிர்த்தபூந் தடத்துலாய்க் குளம்பல
நிரப்பி |
|
|
அங்கண் மாநிலத் தமிழ்தெனப் பரந்ததை
யன்றே” |
|
|
(நாட்டுப்படலம்- 4,5)
|
38 |
116-17 |
'நிலவொளி முத்துங் கவடியும் பணமா |
|
|
அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண' |
|
|
“வரிவ ளைக்குலக் குவையினால் மணிகளால்
மணிகள் |
|
|
தெரித ருங்கர வலவனால் வயின்வயிற் றிரண்ட |
|
|
விரிக ருப்புர வெண்மணற் குன்றினால் ஒலியால் |
|
|
பொருவில் ஆவணம் மறிதிரைக் கடலினைப்
பொருவும்” |
|
|
(நகரப்படலம் -14)
|
100 |
65-68 |
'நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து |
|
|
மம்மர் வண்டின மரற்ற மும்மதம் |
|
|
பொழியும் வாரணப் புயலினம் தத்தம் |
|
|
நிழலொடு கறுவி நிற்பதும் அழகே' |
|
|
“நிழலொடு கறுவி பாகெறிந் தூன்பெய் |
|
|
நிணத்தொடு பழகுகூன் பிறைக் கோட் |
|
|
டழிகவுட் கடாத்த தறுகண்மால் யானை” |
|
|
(சுயம்வரப் படலம் - 61)
|