முன்னுரை |
3 |
|
புலன்களின் இன்பத்தைவிட அறிவின்
இன்பம் சிறந்தது; நீடு நிற்பது என்பது
அறிஞர்
கொள்கை. இலக்கிய இன்பம் அத்தகையதே ஆகும். அத்தகைய இன்பத்தை
நினைத்தொறும்
பேசுந்தொறும் எப்போதும் நுகர்வதற்கு ஆராய்ச்சி துணை
செய்வதாகும். வாழ்க்கைக்கு
மெய்யுணர்வு இன்றியமையாதது. இலக்கிய இன்பத்திற்கு
ஆராய்ச்சி இன்றியமையாதது.
இலக்கியத் துறையிலும் உணரத்தக்க உண்மைகள் பல
உள்ளன. அவற்றுள் சிலவற்றைச்
சுருங்கச் சொல்வதே இந் நூல்.
|
‘கலைக்கதி’ரில் கட்டுரைகளாகத் தொடர்ந்து வெளிவந்தவைகளே இப்போது
இந்
நூல்
வடிவு
பெற்றன. ‘கலைக்கதிர்’ ஆசிரியருக்கு என் நன்றி உரியதாக.
|
|
|
13-5-1953 |
மு.வ. |
|
|
|