பக்கம் எண் :

1. இலக்கிய ஆராய்ச்சி
 

     மல்லிகைப் பந்தலின் கீழே மாலை நேரத்தில் நின்றபடியே ஒருவன் ஒருவகை
ஆராய்ச்சி செய்கிறான். அந்த மல்லிகைக் கொடி எப்படி அங்கே வளர்க்கப்பட்டது,
யார் முதலில் கொண்டு வந்து வைத்தார்கள், அந்த நிலத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்
என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்துவிட்டுப் போகிறான்.
 

      இன்னொருவன் அங்கே வருகிறான். இந்த மல்லிகை, மண்ணின் சத்தையும்
நீரையும் சூரிய ஒளியையும் காற்றையும் எப்படி உட்கொள்கிறது. அவற்றை எப்படி
உணவாக்கிக் கொண்டு வளர்கிறது. எப்படி இலை விடுகிறது, எப்படிக் கிளைத்துப்
படர்கிறது, எப்படிப் பெரும் பொழுதும் சிறு பொழுதும் அறிந்து பூக்கிறது. அந்தப்
பூவிற்கு நிறமும் மணமும் எப்படி அமைகின்றன என்றெல்லாம் ஆராய்ச்சி
செய்துவிட்டுப் போகிறான்.
 

     மற்றொருவன் வருகிறான். அந்தப் பந்தலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்கிறான்;
பூக்கள் வீசும் நறுமணத்தை முகர்ந்து முகர்ந்து களிக்கிறான்; 'என்ன மணம்!' என்று
தன்னை மறந்து திளைக்கிறான்; அங்கிருந்து பிரிந்து செல்ல மனம் இல்லாமல்
நெடுநேரம் கழித்துப் பிரிகிறான்; அந்த மல்லிகைப் பந்தலின் அழகிய காட்சிகளையும்
நறுமணச் சிறப்பையும் அடிக்கடி நினைத்துக்கொண்டே தன்