| இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும்தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார்
 அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம்
 பெறுவதாகும் .அவர்ஈடு இணையற்ற பெரும் எழுத்தாளராக
 விளங்கினார் .உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல்
 தமிழராகஅவர்திகழ்ந்தார் . “மு.வ.” என்ற செல்லப் பெயர்ஒலிக்காத
 தமிழ் இல்லங்களும் நல்உள்ளங்களும் இல்லை எனலாம்.
 
குடும்ப வாழ்வு அவர் , அருமை அன்னை அம்மாக்கண்ணம்மாளுக்கும் அறிவில்சிறந்ததந்தைமுனிசாமி அவர்களுக்கும் செல்லப்பிள்ளையாக
 25.4.1912 ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள
 திருப்பத்தூரிலேபிறந்தார்.அவரது தாய்வழிப்பாட்டி அவரை
 அன்புடன்வளர்த்தார் . முதலில் அவருக்கு வழங்கிய பெயர்
 திருவேங்கடமாகும் . “தாத்தாவின் பெயரை இடுதல்” என்னும் குடும்ப
 மரபுப்படிவழங்கிய பெயரே ‘வரதராசன்’ என்பதாகும்.
 அவர் 1935 ஆம் ஆண்டு தம் மாமா மகளான ராதாஅம்மையாரைமணந்தார்.அவருக்குஆண் மக்கள் மூவர் உள்ளனர்.
 அவர்கள்முறையே திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகியோர் ஆவர்.
 அம்மூவரும்மருத்துவத் துறையில் மணிகளாகத் திகழ்கின்றனர்.
 
 
 |