| கல்வி அவர் வேலத்திலும் வாலாசாவிலும் தொடக்கக் கல்வியைக் கற்றார்.உயர்நிலைப்பள்ளிப் படிப்பை அவர் திருப்பத்தூரில்பயின்றார்.
 முருகைய முதலியாரிடம் தமிழ் கற்றுப் புலவர் முதல் நிலைத் தேர்வில்
 தேர்ச்சிபெற்றார். பின்னர் அவர் 1935ஆம் ஆண்டு தமிழ்ப் புலவர்
 தேர்வுஎழுதிச்சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்து
 ரூ
1,000திருப்பனந்தாள் பரிசுபெற்றார்.அவர்1939இல் பி.ஓ.எல்.பட்டமும்,
 1944ல்எம்.ஓ.எல். பட்டமும் பெற்றார்.1948இல் சென்னைப்பல்கலைக்
 கழகத்திலேயே முதன்முதலாகத் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர்
 அவரே
.1972ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஊஸ்டர் கல்லூரி
 அவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்.) என்ற சிறப்புப் பட்டத்தை
 நல்கிப்பெருமைப்படுத்தியது.அமெரிக்கப்பல்கலைக்கழகம் ஒன்றில்
 ‘டி.லிட்.’ என்னும் சிறப்புப் பட்டம்பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.
 அவர்களேஆவார்.
 
 தொழில்: அவர்1928 இல் முதன்முதல் தாலூகா அலுவலகத்தில்எழுத்தராகப்பணிபுரிந்தார். 1935 ஆம் ஆண்டு முதல் நகராட்சி
 உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939 முதல்
 1944ஆம்ஆண்டு வரை டாக்டர் அ.லட்சுமணசாமிமுதலியார்
 அவர்களின்நல்லுதவியுடன் தமிழ் விரிவுரையாளராகப் பச்சையப்பன்
 கல்லூரியில்பணியாற்றினார்
.1945 ஆம் ஆண்டு
 அக்கல்லூரியிலேயே தமிழ்த்துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துணைப்பேராசிரியராகப்
 பணிபுரிந்தார்.அறிஞர்ரா.பி.சேதுப்பிள்ளைஅவர்களின்மறைவுக்குப்
 பிறகு,1961 முதல் 1971 வரைசென்னைப்பல்கலைக்கழகத்தில்
 தமிழ்த்துறைத்தலைவராகப் 
பணியாற்றினார்.1971 முதல் 1974ஆம் ஆண்டு
 வரைமதுரைப்பல்கலைக் கழகத்தின் புகழ்மிக்க இணையற்ற
 துணைவேந்தராகப்பணிபுரிந்தார்.
 
 அவர்பங்கேற்ற துறைகள் அவர்பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்சென்னை,திருவேங்கடவன், அண்ணாமலை ஆகிய
 
 |