முகப்பு
 
தொடக்கம்

என் அன்புறை
மகா மகோபாத்தியாய டாக்டர்
உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கு

     பார்காத்தார் ஆயிரம்பேர்; பசித்தார்க் காகப்
         பயிர்காத்தார் ஆயிரம்பேர்; பாலர்க் காக
     மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில்
         மனங்காத்த தமிழ்த்தாய் “என் உடைமை யெல்லாம்
     யார்காத்தார்” எனக்கேட்க, ஒருவன் அம்மா
         யான்காப்பேன் எனவெழுந்தான் சாமி நாதன்
     நீர்காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான்
         நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான்.

     பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி !
         போகாத புகழ்க்கன்னி மணந்த நாத !
     செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய!
         சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்!
     எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும்
         இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று
     நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த
         நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க.

                              வ.சுப.மாணிக்கம்


முன்பக்கம்
அடுத்த பக்கம்