| 
 | எண்ணுறும் போது தமிழையே
 யெண்ணீர்; இசைத்துழி தமிழையே யிசைப்பீர்;
 பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
 பழுதறப் பண்ணியின் புறுவீர்;
 உண்ணுறும் போதும் உறங்கிடும் போதும்,
 உயிருளந் துடித்திடும் போதும்,
 கண்ணினு மரிய தமிழையே கருதிக்
 காரிய வுறுதிகொண் டெழுவீர்!
 |  | எந்தாய் வாழ்கசுத்தானந்த பாரதி
 
 |  |