தெய்வம் கூறுவது
|
என்னடா சிறுபயலே
என்னை அழைத்ததென்ன
பம்பை பதனமடா
பாலன் சிறு குழந்தை
உடுக்கு பதனமடா
உடையவன் வந்தேனிப்போ
சொன்ன சொல் தவறமாட்டேன்
சொற் பிழைகள் இல்லாமல்
நாவில் குடியிருந்து
நானே குறி பாடுரண்டா
இந்த மனை தனக்கு
எடுத்தேன் சிறு ஏட்டை
ஏட்டை விரித்துப் பார்த்தேன்,
இந்த வகை சொல்வதற்கு
இந்த மனைதனிலே
இருக்குமொரு கன்னியற்கு
மாலைப் பொழுதினிலே
மங்கையவள் சென்றபோது
இருளோ கருத்த நேரம்
எல்லைக்குப் பின்புறமமாம்
கண்டு பயந்தாளப்பா
கன்னியந்தப் பெண் கொடியும்
உடலே நடுங்கியவள்
மேலது மேதான் சிலுத்து
மதியோதான் கலங்கி
மங்கையவள் வீடு வந்தாள்
பின்னே தெடந்ந்தானப்பா அந்தப்
பேயாண்டி மாமுனியன்
இப்ப வந்து வழக்காடுறான் அந்த
வல்லவனு மாமுனியன்
நானே பிடித்தேனென்று அவன்
நாதன் முன் சொல்லுறான் போ
(உண்டா)இதற்கும் பதில் கேளு
இன்னும் உரைத்து வாதேன்.
அதுலே இருந்து மவள்
படுத்தாளே பாய் தனிலே
மேல் வலியும் கால் வலியும்
மெல்லியற்கும் உண்டுமப்போ.
கண் கட்டும், தலை சுற்றும்
கன்னியற்கு உண்டுமப்போ
நெஞ்சு வலி மாரடைப்பும்
நீதி துலை கண்டேனிப்போ
உண்டுமா இல்லையா
இதற்கும் பதில் கேளு
ஆனாலும் மன்னவனே
அதிகாரி என்னிடத்தில்
கேட்டதற்கு நானுரைத்தேன்
கிருபையுடன் சொல்லிவந்தேன்
(அந்த) வால் முனியை விரட்டுதற்கு
வகை விபரம் சொல்லி வாரேன் |
|
|