|
மன்னாதி மன்னவரே |
|
|
மகா தேவா என் பெருமாள்
அண்ணாவே வாருமிப்போ
அதிகாரி ஏ கறுப்பா
எல்லை கடந்து வாரும்
எல்லை கல்லு தாண்டி வாரும்
ஆறு கடந்து வாரும்
அதிகாரி ஏ கறுப்பா
ஊறுதடம் பிடித்து
உத்தமனே வாருமிப்போ
தெற்கு பார்த்த வீட்டிற்கு
தேவா உமையழைத்தேன்
வடக்கு பார்த்த எல்லைக்கு
வல்லவனே உமையழைத்தேன்.
மேற்க பார்த்த தன் பதிக்கு
மேக ‘உமையழைத்தேன்’
கிழக்க பார்த்த எல்லைக்கு
கிளி மொழியே நானழைத்தேன் |
குறிப்பு:
வீடு எந்தப்பக்கம் பார்த்திருக்கிறதோ அதற்கேற்றாற்போல், தெற்கு, வடக்கு, மேற்கு,
கிழக்கு என்று சொல்லுவார்கள்.
|