|
ஈப்போல் வடிவு கொண்டு என்
இருதயத்தினுட் புகுந்து
சொன்ன சொல் தவறி டாமல்
சொற் குற்றம் வந்திடாமல்
சாஸ்திரத்தை நீரெடுத்து
சமர்த்தா வருவ தெப்போ
!
பக்கங் குறி கேட்டவர்க்குப்
பதிலே உரைப்ப தெப்போ
வைத்த குறிகேட்பவர்க்கு
உடைத் தெறியும் சட்டமதை
சட்டம் நிலைக்க வேணும்
சன்யாசி ஏ கறுப்பா
கேட்ட கேட்ட கேள்விக்கெல்லாம்
கிருபையுடன் சொல்லுமையா
பூசை முடியும் மட்டும்
புண்ணியனே உன் காவல்
மண்டு முடிய மட்டும்
மன்னவனே உன் காவல்
வாழை இலை விரித்தேன்
வைத்தேன் இலைப் பாக்கு
கொளுத்தினேன் நற் சூடம்
கொண்டேன் சிறு அமுது
பால் பழமும் நற்தேங்காய்
படைத்தேனிது வரைக்கும்
தட்சணையும் முன்னே வைத்து
தேவா உமையழைத்தேன்
வைத்ததொரு தட்சனைக்கு
வகை பிரித்துச் சொல்லுமிப்போ
சொல்லி வரங் கொடுக்கும்
சுந்திரனே ஏ கறுப்பா
!
எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி மனம் வாடுகிறேன்
ஆறு பிழை நூறு குற்றம்
அடியேன் செய்த போதிலுமே
குற்றம் பிழை பொறுத்து
குடியிருக்க வாருமிப்போ
சின்னஞ் சிறு மதலை
சிறுவனும தடிமை |
|
|
|