|
பாடம் படிப்பறியேன்
பாட்டின் வகை நானறியேன்,
ஏடும் எழுத்தறியேன்
எழுத்து வகை நானறியேன்,
எண்ணாது எண்ணுகிறேன்
எண்ணி மனம் வாடுகிறேன்,
கார்மேக என்பெருமான்
காத்தாய்ப் பறந்து வாரும்
மன்றுக்கு நானழைத்தேன்
மன்னவரே வாருமிப்போ,
அண்ணாவே என் குருவே
ஆசானே நீர் துரையே
ஏழை அழைத்தேனைய்யா
என்னிடத்தில் வாருமிப்போ,
கோர்ட்டில் வழக்காடும்
கொத்தளத்து வாழ் கறுப்பா
ஐகோர்ட் சட்சி ஐயா
அதிகாரி வாருமிப்போ
கேட்ட குறி தனக்கு
கிருபையுள்ள ஏ கறுப்பா
வாக்குத் தவறாமல்
வன் பிணிகள் வாராமல்
ஏவல் பில்லி சூனியங்கள்
என்னை வந்து சேராமல்
மாற்றானுட வஞ்சனைகள்
மன்னவனே சாடாமல்
தன்னந்தனியிருக்கும்
தற்பரனே வாருமையா!
ஐயப்பன் மலை மேலே
அதிகாரம் கொண்டவரே
ஐயா அழைத் தேனிப்போ
அதிகாரி வாருமிப்போ
வாவூர் மலை மேலே
வழக்காடும் புண்ணியரே
சன்யாசி ஏ கறுப்பா
சமர்த்தனழைத் தேனிப்போ
குறிக்கு அழைத் தேனிப்போ
குறி முகத்தில் வாரதெப்போ |
|
|