அழுகையமர்த்தல்
அழுகிற குழந்தை மானாமதுரைப் பிரம்பு கேட்டு அழுகிறான். தாய்
தன் கணவன் பெருமையைக் கூறி பிரம்பு மட்டுமா, ஊரையே பெயர்த்துக் கொண்டு வர வேண்டுமானாலும்,
கொண்டு வரச் சொல்லுவோம் அழாதே என்று கூறுகிறாள். ஆனைக் கட்டிச் சூடடிக்கும் உன் ஐயாவிற்குப்
பிரம்பா பெரிது? கேள், கொடுப்பார் என்று தாய் தன் குழந்தையைப் பேசத் தூண்டுகிறாள்.
|
மானாமதுரையிலே
மணிப்பிரம்பு வித்த திண்ணு
வாங்கித் தரலையிண்ணு-எங்கட்டி நீ
ஏங்கித் தவிப்ப தேனோ!
மதுரைக்கும் கிழக்க
மழை பேயாக் கானலில
தரிசாக் கிடக்குதுண்ணு உன்னய்யா!
தனிச் சம்பா விட்டெரிஞ்சு
மதுரைக்களம் செதுக்கி
மாணிக்கச் சூடேத்தி
ஆனை கட்டிச் சூடடிக்கும் உன்னய்யா
அதிகாரி பேசுராரே
மதுரை மீனா
மன்னவர் தங்கை உனக்கு
என்ன, என்ன சீதனங்கள்
மானாமதுரை விட்டார்
மல்லியில பாதி விட்டார்
தல்லா குளமும் விட்டார்-தங்கச்சி
சொக்கர் மீனாவுக்கு
ஆனை அசைஞ்சு வர உன்னய்யாவோட
ஆயிரம் பேர் சூந்துவர
! |
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|